Tuesday, May 16, 2023

நேரு நினைவு கல்லூரி மாணவிகள் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் முதலிடம்.

நேரு நினைவு கல்லூரி மாணவிகள் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் முதலிடம்.


திங்கட்கிழமை (15.05.23) தேசிய அளவிலான அடிப்படை அறிவியல் மற்றும் வானியல் தொழில்நுட்ப மாநாடு புதுச்சேரியில் உள்ள பாப் ஜான் பவுல் கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அறிவியல் கண்காட்சி, வினாடி வினா, ஒளிப்பட விளக்கம், கருத்து விளக்கம் மற்றும் சுவரொட்டி விளக்க காட்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்திய வானியல் ஆய்வு மைய அறிஞர் மற்றும் இயக்குனர் முனைவர் க்ரிஸ்பின் கார்த்திக் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் பங்கு பெற்ற நேரு நினைவுக் கல்லூரி முது அறிவியல் முதலாம் ஆண்டு  மாணவிகள் செல்வி ஆ.வித்யா, து.சினேகா மற்றும் ச.நிவேதா ஆகியோர் அல்ட்ராசோனிக் கண்டுபிடிப்பான் என்ற அறிவியல் ஆய்வு செய்து அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு பெற்றனர். 


மேலும் இ.பிரியங்கா சுவரொட்டி மூன்றாம் பரிசு பெற்றார். ச.சரோஜினி மு.ராமலட்சுமி மற்றும் சி.சூர்யா ஆகியோர் வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர். மாணவிகளுக்கு இந்த போட்டிகளுக்கு  இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ.ரமேஷ் அவர்கள் வழிகாட்டினார். இயற்பியல் துறை தலைவர், ஒருங்கிணைப்பாளர், கல்லூரி முதல்வர், கல்லூரி தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் பரிசு பெற்ற மாணவிகளை பாராட்டினர்.
















Nehru Memorial College students topped the National Level Conference on Basic Scientific  Awareness Astronomy & Its Application Conference. 


The National Level Conference on Basic Scientific  Awareness Astronomy & Its Application Conference was held at Pope John Paul College of Education, Puducherry on Monday (15.05.23). Various competitions like Project Expo, Quiz, Video Making, Paper and Poster presentation were held in this. Dr. Chrisphin Karthick, Scientist C and Depty Head of Scope, Indian institute of Astro Physics gave the keynote address. Ms.A.Vidya, D.Sneha and S.Nivetha, first year M.Sc Physics students of Nehru Memorial College, won the first prize in the Project Expo for their scientific research on Ultrasonic Detector. E.Priyanka won third prize for Poster presentation.  S.Sarojini, M.Ramalakshmi and C.Surya participated in the quiz competition. For students these competitions were guided by P.Ramesh, Assistant Professor, Department of Physics. Head of Physics Department, Coordinator, College Principal, College President and Secretary felicitated the award winning students.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, May 8, 2023

பெற்றோரும் ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தினர்-திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 நெகிழ்ச்சி.

பெற்றோரும் ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தினர்-திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 நெகிழ்ச்சி.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவி நந்தினி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600க்கு 600 மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதல் முறை என்பதால் இத்தகைய பெருமையை சேர்த்த மாணவி நந்தினிக்கு திண்டுக்கல் அரசு உதவிபெறும் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவி நந்தினி கூறும்போது ‘இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகிறேன். இந்த பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரியசாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் எனக்கு ஊக்கமளித்தனர்.

எனது வெற்றிக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர். எனது தந்தை சரவணகுமார் தச்சுத்தொழிலாளியாக உள்ளார். அம்மா பானுபிரியா மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்கிற தம்பி உள்ளார்.

நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். கூலித் தொழிலாளி மகளாகிய என்னால் என்ன செய்துவிட முடியும்? என கவலைப்படவில்லை. எனக்கு கல்விதான், படிப்புதான் சொத்து என என் பெற்றோர் சொல்லி சொல்லி வளர்த்தனர்.

அதனையே நானும் இடைவிடாமல் கடைபிடித்தேன். அதனால்தான் இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெற முடிந்துள்ளது. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேற்படிப்பு படிக்க உள்ளேன்’ என கூறினார்.








இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Saturday, May 6, 2023

உயர்தரமான ( NAAC A+)நேரு நினைவுக் கல்லூரியில் படித்தால் உலகையே ஆளலாம்.

உயர்தரமான ( NAAC A+)நேரு நினைவுக் கல்லூரியில் படித்தால் உலகையே ஆளலாம்.


Website Link: https://www.nmc.ac.in




இன்றைய காலகட்டத்தில் பல்வேறு கல்லூரிகள் தோன்றும் வேலையில் தரம் வாய்ந்த கல்லூரியில் படித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும். அந்த வகையில் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி  NAAC தேசிய தரச்சான்று நிறுவனத்தின் உயரிய A+ தகுதியை பெற்று உள்ளது. இதனால் உங்கள் பிள்ளைகளின் கல்வியின் உயர்தரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 56 ஆண்டுகளாக இக்கல்லூரி கல்வி சேவை ஆற்றி வருகிறது. கிராமப்புற மாணவ / மாணவிகளுக்கு அப்துல்கலாம் கண்ட உயர் தரமான கல்வியை குறைந்த செலவில் இன்றளவும் வழங்கி வருகிறது. மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பான தங்கும் விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரியில் 12 துறைகளில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை பல்வேறு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இக்கல்லூரி கணினி அறிவியல் கல்வியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கல்லூரி. இக்கல்வியின் முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் சிறப்பாக உயர் பதவியில் உள்ளனர். MCA மற்றும் MBA  பாடப் பிரிவுகள் நடத்த தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கண்டறிந்து AICTE  சென்ற ஆண்டே  ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் MCA, MBA, M.Sc., DATA SCIENCE,  மற்றும் பல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ /மாணவிகளுக்கு இலவச பேருந்து வசதி, தங்கும் விடுதி அறை இலவசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் செலவின்றி கல்வி கற்க முடியும். மேலும் கல்லூரியிலேயே செயல்படும் BPO மையத்தில் பணிபுரிந்து சம்பாதித்துக் கொண்டே வீட்டில்/விடுதியில் இருந்த படியே முதுகலை படிப்பிற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது...

Website Link: https://www.nmc.ac.in

Admission Link: https://www.nmc.ac.in/admission2026/

நேரு நினைவுக் கல்லூரியில் B.Sc மற்றும் M.Sc இயற்பியல் ஏன் படிக்கவேண்டும்? 

* 1967 ல் பேரறிஞர் அண்ணா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 

* 57 ஆண்டுகள் பாரம்பரியமிக்க கல்லூரி!

* A+ தரச்சான்று பெற்ற,  தன்னாட்சி பெற்ற கல்லூரி!

* 50 ஏக்கர் பரப்பளவில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், விடுதி வசதிகளுடன்  அமையப்பெற்ற கல்லூரி!

* உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம்!

* நாங்கள் தன்னாட்சி பெற்ற கல்லூரி என்பதால் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெரும்வகையில் அவர்களுக்கான சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு தேர்வு வாரியம் (TNPSC) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆகிய தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறும் வகையில் எங்களது பாடத்திட்டம் மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* எங்களது துறையில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

* அனைத்து பேராசிரியர்களும் சராசரியாக 12 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் பெற்றுள்ளனர்.

* எங்களது கல்லூரியில் இயற்பியல் துறை ஆராய்ச்சியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது.

* இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தால் எங்களது ஆய்வக மேம்பாட்டிற்காக ஒரு கோடிக்கு மேலாக நிதி உதவி ழங்கப்பட்டுள்ளது.

* இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்தால் தங்களது மகன் அல்லது மகள் இளங்கலை பட்டம் B.Sc தொடங்கி முதுகலை மற்றும் முனைவர் பட்டம் Ph.D வரை தங்கு தடை இல்லாமல் பயிலலாம்.

* ஒவ்வொரு ஆண்டும் எங்கள் துறையில் முனைவர் பட்டம் பயிலும் மாணவ மாணவிகள் அரசின் நிதி உதவி பெற்று பயின்று வருகின்றனர்.

* கல்வி பயிலும் போது தனித் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி பல்வேறு வெளிப்புற நிறுவனங்களின் மூலமாக வழங்கப்பட்டு வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் வழங்கப்படுகிறது.

* ஒவ்வொரு மாணவ மாணவியரின் தனித் திறன் கண்டறியப்பட்டு அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக  உதவியும் ஊக்கமும் வழங்கப்படுகிறது.

* ஒவ்வொரு ஆண்டும் எங்களிடம் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவ மாணவிகள் நமது நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் இஸ்ரோ போன்ற கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்கு செல்லும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

* தமிழ்நாடு அறிவியல் கழகத்துடன் இணைந்து வானவியல் கழகம் (ஆஸ்ட்ரோ கிளப்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* இதற்காக கல்லூரி நிர்வாகம்  வானியல் அதிநவீன தொலைநோக்கியை  எமது மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி விண்மீன் கூட்டம் பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகிறது.

* நமது கல்லூரி வளாகத்தில் இருந்து சூரியன் மற்றும் நிலா, விண்மீன் கூட்டங்கள் தொலைநோக்கி மூலமாக காண்பிக்கப்பட்டு அதன் இயக்கங்கள் விளக்கப்படுகிறது.

* ஒவ்வொரு ஆண்டும் இணைய வழி மூலமாக  பயிற்சி பெற்று அதற்கான நற்சான்றிதழும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் காரைக்குடி மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனம், வானியல் ஆராய்ச்சி நிறுவனம் உதகமண்டலம், விக்ரம் சாராய் பாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் திருவனந்தபுரம், சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

* இத்தகைய நிறுவனங்களில் மாணவ மாணவியருக்கு பயிற்சி வகுப்புகள் பங்குபெற வைத்து சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.

* எங்கள் துறையில் பயின்ற இளங்கலை முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் உலகின் பல பகுதிகளில் சிறந்த அறிவியல் அறிஞர்களாகவும், பல்வேறு கல்லூரிகள், பல பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களாகவும்  தற்பொழுது பணியாற்றி வருகிறார்கள்.











இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17- EOS-05  செயற்கைகோள் வெற்றி.  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நி...