நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை 2023-2024 செய்த சாதனை தொகுப்பு.
PG
AND RESEARCH DEPARTMENT OF PHYSICS
ANNUAL
REPORT-2023-24
Department
Activities:
- · Arranged live Chandrayn-III
launching event on 23.08.2023 in our campus more than 500 persons
were watched and enjoyed the live launching.
- · Conducted Zero shadow
day on 24.08.2023 to measured earth radius by participants.
- · More than 5000
participants watched the sky and stars through our advanced Telescope during
1-week Tamilnadu Govt Flower show-2023 held at Ercaud.
- · In view of Career
guidance for Post-graduate students arranged special lecture on Problem
Solving Strategies in CSIR-NET/SET/GATE/TRB in physical sciences held on 28.08.2023
lectured by Dr.V.K.Chantrasekar, Associate Professor, SASTRA University,
Thanjavour.
- · Organised Career Guidance and Skill Development Programme for Physics Stream on 21.09.2023, Mr.M.Muthuvelan Senior Scientific Officer Grade B The South India Textile Research Association (SITRA) Coimbatore be the Resource person.
- · 25 students Visited CSIR-CECRI,
karaikudi on the occasion of open day on 26.09.2023.
- ·
In view of Dr. APJ. ABDUL KALAM’s birth day “The National Youth Uprising Day” was
celebrated on 15.10.2023.
- · National Children’s science
congress, organised for the school students all over
Tamilnadu from 25.11.2023-26.11.2023, 1350 school students from various
districts of Tamilnadu were participated and displayed their innovative
scientific models.
- · In view of “National Science Day” conduct various
knowledge based events for the students on
28.02.2024.
- · 20
Students were visited “Radio
Astronomy Centre”,
Ooty on 08.03.2024.
- · “ISRO SPACE ON WHEELS”
Exhibition organised for both school and college students on 12.03.2024, more
than 2000 students were visited and benefitted.
- Students Achievements:
- · Miss.M.V.Elakkiya Priya of III B.Sc Physics has successfully completed two months summer internship in IIT,Chennai from 22.05.2023 to 19.07.2023
- · Miss.M.V.Elakkiya Priya of III B.Sc Physics has successfully completed 30 days internship in VSSC, Thiruvananthapuram from 30.11.2023 to 03.01.2024.
- · Miss.D.Sneha of II M.Sc physics has successfully completed 4- online training programme conducted by ISRO.
- · Miss.A.Vidhya
of II M.Sc physics has successfully
completed 3- online training programme conducted by ISRO.
- · Miss.P.Santhiya
of II M.Sc physics has successfully
completed 2- online training programme conducted by ISRO.
- · Students Of both UG and
PG participated a “Astrophysics Symposium - 2023”from 29.06.2023 to
01.07.2023 held at Bishop Heber College, Trichy.
- · Students of II M.Sc
physics participated a TESSERACT-2023 and Miss.S.Nivetha, A.Vidhya
and D.Sneha won the first prize for their scientific models and Miss.E.Priyanka,
secured the third place for her poster presentation.
- · Students of II M.Sc
physics participated and presented their scientific models in National
Science exhibition held at St.Joseph’s college, Trichy on 20.10.2023.
- · Both UG and PG Students
were participated 7th –State level inter-intuitional physics meet (APEIRON-2024)-2024.Miss.M.V.Elakkiyapriya
of III B.sc physics got 2nd place for PPT presentation.
- · Mr.R.Santhoshkumar,
Mr.R.Anandharaman, Miss.R.Sneha and Miss.S.Vinothini of I M.Sc Physics, has successfully completed 2- online training
programme conducted by ISRO.
- · Miss.M.V.Elakkiyapriya
and Miss.S. Madhumitha of III B.Sc physics has
successfully completed 2- online training programme conducted by ISRO.
- ·
Students of Physics
department got overall third place in March-Past in the Sports meet held on 30.12.2023.
- Staff Performances:
- ·
Dr.R.Kabilan
has published
2 research articles in Reputed
Journals. He has participated in 5-days Physics
Teachers Training Programme - 2023, from 17 to 21 July, 2023 held
at Azim Premji University, Bengaluru.He also participated and successfully
completing the UGC approved 6-day Short-Term Programme on "ICT Skills
for Educational & Research Workspace" held from 11-16 December,
2023 (Through Online Mode).
- · Mr.P.Ramesh
has published 2 research article in Reputed Journal, he has participated and
successfully completed 5-days Teachers’ orientation programme for upskilling
in physics held at UGC-Malaviya mission teacher training centre,
University of Hyderabad from 19.02.2023 to 23.02.2023. 3-days Workshop on SSA STM, Conducted by ISRO, Bangalore. He also participated
more than 10 online workshops conducted by ISRO.
- ·
Dr.K.Parimala
has published 4 research articles in
Reputed Journals.
நேரு நினைவுக் கல்லுரியில் இஸ்ரோவின் சக்கரங்கள் மீது விண்வெளி கண்காட்சி.
நேரு நினைவுக் கல்லுரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சக்கரங்கள் மீது விண்வெளி கண்காட்சி(ISRO Space on Wheel) 12.03.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் மற்றும் செயலர் பொன்.இரவிச்சந்திரன் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். கல்லுரி குழு உறுப்பினர் மாலா பாலசுப்பிரமணியன், திறன் மேம்பாட்டு இயக்குனர் சூர்யா, முதல்வர் முனைவர் திரு.A.வெங்கடேசன், சுயநிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு.M.மீனாட்சிசுந்தரம், துணை முதல்வர் K.T. தமிழ்மணி மற்றும் இயற்பியல் துறை தலைவர் முனைவர் A. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 2,000 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இஸ்ரோவின் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் விண்வெளிப் பயணங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குவதே முதன் மையான குறிக்கோளாக இருந்தது. அதே நேரத்தில் இளம் மாணவர்களிடையே ஆர்வத்தையும் தூண்டும் விதமாக அமைந்தது. குமார் நூலக அதிகாரி இஸ்ரோ ஸ்ரீஹரிக்கோட்டா அவர்கள் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் மாதிரியைப் பற்றி விவரித்து மாணவர்களுக்கு விண்வெளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சக்கரங்கள் மீது விண்வெளி கண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கைகோள்கள், விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஏவுதளங்களின் அளவிலான மாதிரிகள் இருந்தன. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு ராக்கெட் மற்றும் விண்வெளி வீரங்கனை சுனிதா வில்லியம்ஸ் புகைப்படத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி வழியாக சூரிய வடிகட்டி மூலம் சூரியன் காண்பிக்கப்பட்டது. இயற்பியல் துறை பேராசிரியர் பொ.ரமேஷ், கண்காட்சி. ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
விழாவுக்கு மாநில மாநாட்டு செயல் தலைவர் சிவ.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்து பேசினார். முனைவர் K.T.தமிழ் மணி கல்லூரி துணை முதல்வர், முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர், ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொ.ரமேஷ், இயற்பியல் துறை பேராசிரியர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஹரி பாஸ்கர் மாவட்ட இணை செயலாளர் அவர்கள் நிகழ்வின் நிறைவில் நன்றி உரை ஆற்றினார். முனைவர் சி.பிரபாகரன், தமிழ் ஆய்வுத்துறை, பேராசிரியர் M.மாணிக்கத்தாய், மாநில துணைத்தலைவர் அவர்கள் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கினார்.
சந்திராயான்-3 தரையிறங்கும் வெற்றியை அதிநவீன தொலைநோக்கியுடன் நேரலையில் கண்டு மகிழ்ந்த நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள்
சந்திராயான்-3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் ஜூலை 14, 2023 மதியம் 2:35 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எல்.வி.எம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக ஐந்து முறை உந்துவிசை அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ல் நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. அதன் பிறகு நிலவின் சுற்றுவட்ட பாதையில் அதனுடைய வேகம் ஐந்து முறை படிப்படியாக குறைக்கப்பட்டு 163 x 153 கிலோமீட்டர் ஆக சுற்றுவட்ட பாதை நிலை நிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 17ல் உந்துவிசை கலனும் தரையிறங்கியும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இறுதியாக ஆகஸ்ட் 23 மாலை 6.04 மணிக்கு தரையிறங்கி வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இதன் பிறகு ஊர்தி வெளிவந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
இந்த அரிய சரித்திர நிகழ்வை 400 க்கும் மேற்பட்ட நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள், அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நேரடியாக கண்டு மகிழ்தனர். ராக்கெட்டுகள் மற்றும் சந்திராயான்-3 செயற்கைக்கோள் மாதிரிகள் மூலம் செயல்படும் விதம் விளக்கப்பட்டது. மேலும் அதிநவீன தொலைநோக்கி மூலம் நிலவையும் கண்டு மகிழ்ந்தனர். கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, முனைவர் குமரராமன், கல்லூரி சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறை தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து இஸ்ரோக்கும், அதில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனனர். இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்வை NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை உடன் இணைந்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், இந்திய வானியல் சங்கம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல்பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், ஆகியவை நடத்தியது.
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் சந்திராயான்-3 தரையிறங்கும் வெற்றி நேரலை காணொளி.
புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் உலக மாணவர்கள் தினம் -உறுதிமொழி ஏற்பு.
நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக உலக மாணவர்கள் தினம் அக்டோபர் 16 திங்கட்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மூங்கில் செடி வழங்கி, மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும், மூங்கில் அதிக அளவில் ஆக்சிஜன் வழங்குவது குறித்தும் விளக்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் மற்றும் சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி அவர்கள் நமது வாழ்வில் துன்பத்தில் துவளும் யாரேனும் ஒருவர் வாழ்வில், நாம் ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால், நாம் மனிதனாக பிறந்த பலன் நம்மை முற்றிலும் வந்ததையும் என்ற அப்துல் கலாம் உறுதிமொழி வாசிக்க பேராசிரியர்கள் முன்னிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள் (Zero Shadow Day).
பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது. அந்த நாளையே நிழலில்லா நாள் (Zero Shadow Day) என்கிறோம். இது வருடத்திற்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே இருக்கும் இடங்களில் நிகழும். நமது இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து (குஜராத்) தென் பகுதி இறுதி (கன்னியாகுமரி) வரை இருக்கும் இடங்களில் நிகழக்கூடியது. இன்று 24.08.23 வியாழக்கிழமை புத்தனாம்பட்டியில் நிழல் இல்லாத தினம் ஆகும்.
நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறை மற்றும் NMC அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு நடத்தியது. கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை பேராசிரியர்கள் கபிலன், ரமேஷ், ரமேஷ் பாபு, முருகானந்தம், ரக்ஷனி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இன்று 24.08.23 வியாழக்கிழமை மதியம் 12:18 மணி அளவில் சோதனை மூலம் நிழலில்லா நாள் நிகழ்வு மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
இதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்?
பல்வேறு பொருட்களின் நிழலின் நீளங்களை உற்றுநோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினாராம்.
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் சம பகல் இரவு நாள் மூலம் பூமியின் ஆரத்தை கணக்கிடும் ஆய்வு.
சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 21 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.
நேரு நினைவு கல்லூரி, இயற்பியல் துறை மற்றும் NMC அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து சம பகல் இரவு நாள் நிகழ்வு நடத்தியது. கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை பேராசிரியர்கள் கபிலன், ரமேஷ், ரமேஷ் பாபு, முருகானந்தம், ரக்ஷனி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். இன்று 21.03.24 வியாழக்கிழமை மதியம் 12:18 மணி அளவில் சோதனை மூலம் சம பகல் இரவு நாள் நிகழ்வு மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் பூமியின் ஆரத்தை ஏறத்தாழ சரியாக கணக்கிட்டனர்.
காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.
மத்திய மின்வேதியியல் ஆய்வகம் 1953ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று, அப்போதைய இந்தியக் குடியரசு தலைவர் முனைவர் மேதகு சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய நாட்டின் 12வது ஆய்வகமாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமத்தின் கீழ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள். மத்திய மின்வேதியியல் ஆய்வகம் ஒரு பெருமை மிக்க நிறுவனமாக, அதாவது 100 விஞ்ஞானிகள், சுமார் 175 பிற ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், மற்றும் 100 ஆராய்ச்சி மாணவர்களுடன் தெற்காசியவில் மின்வேதியியலில் மிகப் பெரிய ஆய்வகமாகத் திகழ்கிறது. இந்தியாவில் மின்வேதியியலில் பல்வேறு தொழில் நுட்பங்களுக்கான துவக்கத் தளமாக திகழ்வதுடன், ஏறத்தாழ 900 காப்புரிமைகள் மற்றும் 7500 மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை பல்வேறு உலகத்தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளது. மேலும், 250 செயல்முறைகள், 600 நிதி உதவி மற்றும் மானியத் திட்டங்கள், 450 தொழில் தொடங்க உரிமங்கள் ஆகியவைகளை இந்த தேசத்திற்கு வழங்கியதுடன், தேசத்தின் அறிவியல் வரைபடத்தில் ஒரு மைல் கல்லாகவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
இந்த ஆய்வகமானது மின்வேதியியல் மற்றும் தொழில் நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுடன் மின் வேதியியல் ஆய்வின் மூலம் பல்வேறு ஆராய்ச்சி வினாக்களுக்கு விடைகாணும் விதமாக செயல்படுகிறது. தனது ஆராய்ச்சிகளில் முக்கியமாக அரிமான அறிவியல் மற்றும் பொறியியல், மின் வேதியியல் பொருட்கள், மின் வேதியியல் சக்தி மூலங்கள், மின் வேதியியல் மாசுக் கட்டுப்பாடு, அடிப்படை மின் பூச்சு, மீச்சிறு (நானோ) அளவிலான மின் வேதியியல், மின் கணிம/கரிம வேதியியல் ஆகிய துறைகளில் எதிர்கொள்ளும் தொழிற்சாலை பிரச்சினைகளை சரிசெய்யும் விதத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (26.09.23) காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பார்வையாளர் தினம் கொண்டப்பட்டது. இதில் இதுவரை செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சிகள் குறித்த கண்காட்சி இடம் பெற்றது. நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை சார்ந்த சுமார் 20 மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். அதில் லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி, மெட்டல் அயன் பேட்டரி, மெட்டல் சல்பர் பேட்டரி, உலோக காற்று (metal-Air) பேட்டரி, Flow பேட்டரி போன்ற அனைத்து வகையான பேட்டரி குறித்தும், அதன் பயன்கள் மற்றும் தேவைகள் குறித்தும் தெளிவாக ஆராச்சியாளர்கள் எடுத்து கூறினர். சூப்பர் மின்தேக்கி மூலம் மின்சார வாகனம் தயாரித்தல் குறித்தும், இதன் மூலம் எதிர்கால எரிபொருள் பயன்பாட்டை சமாளிக்க, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க போன்ற பல்வேறு தேவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினர். பொருட்களின் அரிமான (இரும்புக் மேற்பரப்புகளில் பிடிக்கும் துருவை) விளைவுகளை வேதியியல் முறையில் நீக்க முடியும் எனவும், பல்வேறு கட்டிடங்கள், ராணுவ உபகரணங்கள், பாலங்கள், கப்பல்கள் எவ்வாறு அரிமான இழப்புக்களை தடுக்கிறார்கள் எனவும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது.
கண்ணாடி பொருட்களை எவ்வாறு அறிய அழகு பொருட்களாக பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பலவகையான ஆராய்ச்சி பொருட்களை சோதனை செய்யும் உயர் தெளிவுத்திறன் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி (HR -TEM), புல உமிழ்வு ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (FE-SEM), X-Ray Powder Diffraction (XRD), Raman Spectrometer, ஃபோரியர்-மாற்றும் அகச்சிவப்பு நிறமாலை (FT-IR), புற ஊதா கண்ணுறு நிறமாலைமானி (UV-Vis-NIR), நிறை நிறமாலைமானி (Mass spectrometry) போன்ற உயர் நிறமாலை கருவிகள் செயல்படும் விதம் தெளிவாக விளக்கப்பட்டது. இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
ஊட்டி வானொலி வானியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (RAC) பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.
கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகதில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரியி உதவி பேராசிரியர்.
கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் ( Kodaikanal Solar Observatory) என்பது இந்திய வானியற்பியல் மையத்தித்தால் இயக்கப்படும் ஆய்வகம் ஆகும். தென்னிந்தியாவிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. 1881 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியாவின் வானிலை ஆய்வுச் செய்தியாளர் பிலான்போர்டு சூரிய ஆய்வுக்கான விதையை விதைத்தார். "பூமியின் மீதான சூரிய வெப்ப சக்தியினை துல்லியமாக அளவிடுவது, குறிப்பிட்ட காலத்திற்கான அதன் வேறுபாடுகள் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக மேம்பட்ட சூரிய கண்காணிப்பு முறைகள் முதலிய முன்னேற்ற நடவடிக்கைகளை இவர் பரிந்துரைத்தார்.
20 அங்குல தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட சூரியன், விண்மீன்களின் புகைப்படங்கள், அவற்றின் கதிர்நிரல் வரைபடங்கள் ஆகியனவற்றின் முக்கியத்துவமும் அவை குறிப்பாக தென்னிந்தியாவின் மலை வாழிடத்தில் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் 1882, மே மாதத்தில் நார்மன் இராபர்ட்டு போக்சான் மதராசில் முன்மொழிந்தார்.
1893 ஆம் ஆண்டு மதராசு மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை தொடர்ந்து, சூரியனைப் பற்றிய புரிதல்களை அதிர்கரிக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. தென்னிந்தியாவின் மிக உயரமான, தூசு குறைந்த கொடைக்கானலில் ஒரு சூரிய இயற்பியல் வான் ஆய்வகத்தை நிறுவிட இலார்டு கெல்வின் முடிவு செய்தார். மிச்சி சிமித் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 1895 இல் பணிகள் துரிதமாக நடந்தன. மதராசு வான் ஆய்வகத்திலிருந்த கருவிகள் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டு 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இல் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் நிறுவப்பட்டது.
1909 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்குதான் முதன்முதலில் எவர்செட்டு விளைவு கண்டறியப்பட்டது. இந்த ஆய்வகத்தில் திரட்டப்பட்ட சூரிய தரவுகள் உலகில் கிடைக்கப்பெறும் மிகப்பழமையான தொடர் வரிசைத் தரவுகளாக 120 ஆண்டுகளுக்கு மேல் பராமரிகப்படுகிறது. பூமத்திய செறிவு, மின்னோட்டம் தொடர்பாக இங்குத் திரட்டப்படும் துல்லியமான தரவுகள் தனித்துவம் மிக்கவையாகும். அயன மண்டல ஆழம் காணல், புவிகாந்தம், சூரிய கரும்புள்ளி நகர்வு, சூரியனின் மேற்பரப்பு ஆய்வுகள் போன்றவை இங்கு வழக்கமாக நடைபெற்று வருகின்றன. இங்கு திரட்டப்படும் தரவுகளின் தொகுப்புகள் தேசியத் தரவு மையம் மற்றும் உலாகாயத் தரவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
வைணு பாப்பு 1960ல் இங்கு இயக்குநராகப் பதவியேற்றார். நவீன கதிர் நிரல் வரைபட வசதிகள் கொண்ட 12 மீ சூரிய கோபுரம் ஏ.கே. தாசுவால் 1960 இல் இங்கு நிறுவப்பட்டு சூரியமைய்ய நிலஅதிர்ச்சியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காந்தப்புல வரைபட ஆய்வுமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 1977 இல் இங்கிருந்த வானியல் அறிஞர்கள் பலர் பெங்களூருக்கு மாற்றப்பட்டு அங்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தைத் தொடங்கினர்.
கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம், இந்திய வான் இயற்பியல் மையம் மற்றும் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் இணைந்து மூன்று நாள் (30.09.23 முதல் 02.10.23 வரை) மாநில அளவிலான பயற்சி நடத்தியது. இதில் நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் பங்கு பெற்று அங்கு நடைபெறும் ஆராய்ச்சி பற்றி நேரடியாக தெரிந்து கொண்டார்.
புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்.
ஆதார் என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் அடையாள அட்டை வைத்து தான் அரசின் பல்வேறு உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும். புதிதாக ஆதார் அட்டை பெறும் போது அதில் சில தகல்வல்கள் (கைப்பேசிஎண், முகவரி, புகைப்படம், விழித்திரை) மாற்றம் தேவைப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக திருவரங்கம் அஞ்சல் துறைவழியாக ஆதார் திருத்த முகாம் நேரு நினைவு கல்லூரியில் இன்று (11.09.23) முதல் ஒரு வாரம் நடைபெறுகிறது. புலிவலம் தபால் உதவியாளர் R.K. கார்த்திக் மற்றும் புத்தனாம்பட்டி தபால்காரர் K.மௌனிதா ஆகியோர் இணைய வழியாக ஆதாரில் திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த முகாம் மூலம் இன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்தனர். முன்னதாக இந்த முகமை கல்லூரி முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
அகில இந்திய உயர்கல்வி தேர்வில் தேர்ச்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் மாணவி.
நேரு நினைவுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் M.V. இலக்கியப்பிரியா வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். ஆசிரியரின் வழிகாட்டுதலோடு கடந்த கடந்த அக்டோபர் மாதம் அறிவியல் முதுநிலை கல்விக்கான கூட்டுச் சேர்க்கை (Joint Admission Test for Masters) (JAM) தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார்.அதன் படி பயிற்சி எடுத்து கடந்த 11 பிப்ரவரி 2024ல் தேர்வு எழுதினார். இதன் தேர்வு முடிவுஇப்போது வெளியிடப்பட்டதில் அகில இந்திய அளவில் உயர் தரவரிசையுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை கல்லூரி தலைவர், செயலர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
அறிவியல் முதுநிலை கல்விக்கான கூட்டுச் சேர்க்கை தேர்வு என்பது இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மற்றும் ஏனைய சிறந்த இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை அறிவியல் மற்றும் இளநிலை அறிவியல் பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு பாடங்களுக்கான சேர்க்கையை ஒருங்கிணைக்க நடத்தும் தேர்வாகும். முதநிலை அறிவியல், முதுநிலை-முனைவர் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் மற்றும் இளநிலை அறிவியல் பட்டத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளும் பாடத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒரே தேர்வின் மூலம் சேர்க்கையை நடத்துவதும், அறிவியலை ஒரு பணிவிருப்பாக அறிவுத்திறனுள்ள மாணவர்களுக்கு கொண்டு செல்வதும் இத்தேர்வின் குறிக்கோள். நாளடைவில் இத்தேர்வு நாட்டின் பட்டப்படிப்பில் அறிவியல் கல்வித் தரத்தின் தரக்குறியீடாக விளங்கும்.
சென்னை IIT யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொண்ட நேரு நினைவு கல்லுரி மாணவி.
நேரு நினைவு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் மா.வே. இலக்கிய பிரியா சென்னை IIT யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொள்ள கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தார். சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து கடந்த மே மாதம் தேர்வு செய்தது. இந்தியா முழுவதும் இருந்து இயற்பியல் கோடை பயிற்சி பெற 18 பேர் மட்டுமே தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் முனைவர் G.அரவிந்த் அவர்கள் வழிகாட்டுதலின் படி எடை நிறமாலைமானி மூலம் அயனிகளின் நிறையை கணக்கிடும் ஆய்வு மேற்கொண்டார்.
நிறை நிறமாலைமானி அணுக்கள், மூலக்கூறுகள் மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட துகள்களை அந்தந்த மின்சுமை அவற்றின் நிறை விகிதங்களில் உள்ள வேறுபாடுகளைப் பயன்படுத்தி பிரிக்கிறது. இது அணுக்களின் சரியான மூலக்கூறு நிறையை அளவிட பயன்படுகிறது. இந்த முறையில் அயனிகள் வலிமையின் மின்சார புலத்தால் முடுக்கிவிடப்படுகின்றன. பின்னர் ஒவ்வொரு அயனிகலும் நிறமாலைமானி கருவியை அடைய எடுக்கும் நேரம் அளவிடப்படுகிறது. அயனிகள் அனைத்தும் ஒரே மின்னூட்டத்தைக் கொண்டிருந்தால், அவற்றின் இயக்க ஆற்றல் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, ஒவ்வொரு அயனியும் வேகம் அதன் நிறையை பொறுத்தது. இதன் மூலம் ஓர் இடத்தில் உள்ள தனிமங்களின் வகை மற்றும் நிறையை அறியலாம். இந்த உருவகப்படுத்துதல்கள் SIMION 8.0 மென்பொருளைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. இந்த ஆய்வு மூலம் கனமான நிறை கொண்ட அணுவை விட இலகுவான நிறை கொண்ட அணு அதிகமாக பிரிவடைதை கண்டறிந்தார்.
இந்த ஆய்வு செய்வதற்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 12,000 ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இயற்பியல் உதவி பேராசிரியர் P.ரமேஷ் அவர்கள் வழி காட்டினார். இந்த ஆய்வு மேற்கொண்ட மாணவியை கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, முனைவர் குமாரராமன் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறைத் தலைவர் கபிலன் ஆகியோர் பாராட்டினர்.
ஒரு மாத இஸ்ரோ சான்றிதழ் பெற்ற நேரு நினைவுக் கல்லுரி மாணவி.
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை இயற்பியல் பயிலும் சினேகா.து (P22PHY106), இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட அடிப்படை விண்வெளி அறிவியல்-START பற்றிய ஒருமாதம் இணைய வழியில் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார். இயற்பியல் உதவி பேராசிரியர் P.ரமேஷ் அவர்கள் வழி காட்டினார். இந்த பயிற்சி மேற்கொண்ட மாணவியை கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, முனைவர் குமாரராமன் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம், மற்றும் துறைத் தலைவர் கபிலன் ஆகியோர் பாராட்டினர்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சி, புவிக்கோளத்தின் விண்வெளி வளிமண்டல மற்றும் காலநிலை, காஸ்மிக் கதிர்கள் அறிமுகம், பூமியின் அயனோஸ்பியர், காந்த மண்டலம், சூரியன்-பூமி தொடர்பு மற்றும் விண்வெளி வானிலை, பூமியின் காந்தப்புலம் & புவிவெளி, பூமி மற்றும் கிரக உடல்களின் ரிமோட் சென்சிங் அறிமுகம், பூமிக்கு அருகிலுள்ள இடத்தை அணுகுவதற்கு L7-ராக்கெட்டுகள்: ஒலிக்கும் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள், விண்வெளி தொழில்நுட்பத்தில் வேதியியல், விண்வெளி அறிவியலில் வேதியியல், சூரியன், சூரிய குடும்பம்: உருவாக்கம், பரிணாமம் மற்றும் தற்போதைய நிலை, சூரிய குடும்ப ஆய்வுக்கான அறிவியல் பேலோட் மேம்பாடு, சூரிய குடும்பத்தில் உள்ள நிலப்பரப்பு கோள்களின் வளிமண்டலங்கள், நிலவின் தோற்றம் மற்றும் பரிணாமம், சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள், வால் நட்சத்திரங்கள் மற்றும் விண்கற்கள், விண்வெளி ஆய்வுக்கான பணி வடிவமைப்பு, விண்வெளி அறிவியலுக்கான கண்காணிப்பு நுட்பங்கள், வானியல் மற்றும் வானியற்பியல் அடிப்படைகள் எக்ஸோப்ளானெட்டுகள் மற்றும் பூமி போன்ற எக்ஸோப்ளானெட்டுகள், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி வாய்ப்புகள், வானியற்பியல் அறிமுகம் மற்றும் பூமிக்கு அப்பால் வாழ்வின் தேடல், அண்டவியல் அறிமுகம், வானியல் மற்றும் வானியற்பியல் அடிப்படைகள் போன்ற தலைப்புகளில் இந்த இணைய வகுப்பு நடைபெற்றது.
L1-India’s Space Exploration Endeavour: Context of ISRO’s START programme
L2 -Space observations of Geosphere - Biosphere – atmosphere interactions and climate
L3-Introduction to Cosmic Rays
L4-Earth’s Ionosphere, Magnetosphere, Sun-Earth interaction and Space Weather
L5-Earth's magnetic field & Geospace
L6-Introduction to Remote Sensing of Earth and planetary bodies
L7-Rockets to access the Near-Earth Space: Sounding Rockets & Launch Vehicles
L8-Chemistry in Space Technology
L9-Chemistry in Space Science
L10-The Sun
L11-The Solar System: Formation, evolution and the present state
L-12 Scientific Payload development for Solar System Exploration
L-13 Atmospheres of Terrestrial Planets in the Solar System
L14-Origin and Evolution of the Moon
L-15 Minor Bodies in the Solar System – Asteroids, Comets and Meteors
L16- Mission Design for Space Exploration
L17- Observational Techniques for Space Science
L-18 Basics of Astronomy & Astrophysics
L-19 Exoplanets and Earth-like Exoplanets
L20- Research Opportunities in Space Science and Technologies
L21- Introduction to Astrobiology and Search of Life Beyond Earth-Live
L-22 Introduction to Cosmology
L23- Basics of astronomy & astrophysics- part 2
நேரு நினைவு கல்லூரி மாணவிகள் புதுவையில் நடைபெற்ற தேசிய அளவிலான வானியல் தொழில்நுட்ப மாநாட்டில் முதலிடம்.
நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான மூன்று நாள் வான் அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்பு.
திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் வான் அறிவியல் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் உதவி பேராசிரியர் பொ.ரமேஷ் பங்குபெற்று சூரியனின் இயக்கம் நிழலில்லா நாள் மற்றும் சூரிய நிழல் வைத்து புவியின் ஆரம் கணக்கிடும் முறை ஆகியவற்றை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். முது அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவிகள் செல்வி து.சினேகா ச.சரோஜினி, மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் ரா.ஆனந்தராஜா மற்றும் க.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கின் இந்திய விண்வெளி முதல் இஸ்ரோ முதுபெரும் விஞ்ஞானி பேராசிரியர் இளங் கோவன் பேசினார். இரண்டாம் நாள் முதல் அமர்வை நிலா மனிதர் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் முனைவர் மயில் சாமி அண்ணாதுரை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் நிறுவனர் ஜெ.மனோகர், பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயா பரன், அறிவியல் புல முதன்மையர் முனைவர்வய லெட் தயாபரன், அறிவியல் பலகை மாநில ஒருங் கிணைப்பாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் பேசினர்.
இந்த மூன்று நாள் நிகழ்வில் புத்தகக் கண் காட்சிகள், வானியற்பியல் கண்காட்சிகள், இரவு வான் நோக்கல் நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், கோளரங்க காட்சிகள் இடம்பெற்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வானியல் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு.
இன்று 05.07.2023 மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற இஸ்ரோ இளநிலை விஞ்ஞானி பால சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று விளக்கங்களை அளித்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும் சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.
நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி வழியாக சூரிய வடிகட்டி மூலம் சூரியன் காண்பிக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் ஆனந்தராஜா மற்றும் பாஸ்கரன், மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.இந்த விழாவில் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.
நேரு நினைவு கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வான்நோக்கும் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். கல்லூரித் தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தொடங்கிய் வைத்தார். கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம், கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் பிரபு, துறை தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவில் வான் நோக்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சுற்றுலாத்துறை சேலம் ஆகிய துறைகள் ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் மலர் கண்காட்சி உட்பட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வகையில் சேலம் மாவட்ட சுற்றுலாத்துறை தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி மற்றும் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி இணைந்து ஏற்காட்டில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி, பகல் நேர வானியல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 16 கருத்தாளர்கள் 10ற்கும் மேற்பட்ட பல்வேறு விதமான திறன் வாய்ந்த, விலையுயர்ந்த தொலைநோக்கிகளோடு ஏற்காட்டிற்கு வந்துள்ளனர். ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான அண்ணா பூங்கா, லேடிஸ் வியூ பாயிண்ட் , சில்ட்ரன் வியூ பாயிண்ட், சேர்வராயன் கோவில், ரோஸ் கார்டன், பொட்டானிக்கல் கார்டன், லேக் பார்க் உட்பட பல சுற்றுலா தளங்களில் பகல் நேர வானியல் நிகழ்ச்சியும், இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து சிறப்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டுவருகிறது.
புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி இயற்பியல் பேராசிரியர் பொ.ரமேஷ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார். பகல் நேர வானியல் நிகழ்ச்சியில் பல்வேறு வானியல் சார்ந்த கருத்துக்கள் மக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சூரியனின் கரும்புள்ளிகள் தொலைநோக்கி வழியே சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியில் பிறை நிலா, வெள்ளியின் பிறை மற்றும் சில நட்சத்திர கூட்டங்களை கண்டு இரசிப்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த விளக்கங்களை தமிழ்நாடு அஷ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் இங்குள்ள பொதுமக்களும் குழந்தைகளும் என பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு நிகழ்வுகளை கண்டு களித்து உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இந்நிகழ்வில் தொலைநோக்கிகள் மூலம் வான்நோக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது ஒரு புது முயற்சியாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். இவ்வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்காக தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
N Trichy News Link
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment