அக்டோபர் 15-க்குப் பிறகு, பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம்- மத்திய அரசு
கரோனா பொது முடக்கத்தின் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5-ம் தேதி முதல் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு நேரில் வர விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். பள்ளி மற்றும் கல்வி நிலையங்கள் திறப்பு தொடர்பான, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை, அந்தந்த மாநில அரசுகள் தயார் செய்ய வேண்டும். கல்லுாரி மற்றும் உயர் கல்வி நிலையங்கள், இயங்கும் நேரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்துடன், கல்வி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சகம் கலந்தாலோசித்து முடிவெடுத்து கொள்ளலாம். இங்கும், ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டும். உயர் கல்வித்துறையில், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வக கல்வி தேவைப்படும் அறிவியல் மாணவர்களுக்கு மட்டும், வரும், 15 முதல் அனுமதி அளிக்கப்படும்.
பொது, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், ஆன்மிகம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில், 100 பேர் வரை பங்கேற்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை, 15க்கு பின் அதிகரிப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள, அதிகாரம் அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவுகள் அனைத்துமே, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை பொது முடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படும்.
MHA Order Dt. 30.9.2020 on guidelines for re-opening<----Click link.
No comments:
Post a Comment