Tuesday, September 15, 2020

3 வயது சிறுவனின் அசாத்திய திறமை உலகில் நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டும் சிறுவன்.

3 வயது சிறுவனின் அசாத்திய திறமை உலகில் நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டும் சிறுவன்.

கரூரைச் சேர்ந்த 3 வயதுச் சிறுவன் உலகின் 80 நாடுகளின் தலைநகரங்களையும், பொது அறிவு வினாக்களுக்கும் உடனுக்குடன் விடைகளைக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கரூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் ஜயராமன். ஹோட்டல் பொது மேலாளர். இவரது 3 வயது மகன் ஜஸ்வந்த். மழலையர் பள்ளிக்குச் சென்று வருகிறார். தாய் கல்யாணி.


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்த பொருள்களின் பெயர்களைக் கூற ஆரம்பித்த இந்தச் சிறுவன், பின்னர் தொலைக்காட்சிகளில் நாடுகளின் பெயர்களைக் கூறும்போது, அந்த நாடுகளின் தலைநகரங்களையும் கூறத் தொடங்கினார். இதனால் ஆச்சரியம் அடைந்த சிறுவனின் பெற்றோர் அளித்த பயிற்சி காரணமாக குறிப்பிட்ட நாடுகளின் பெயர்கள், உலகின் மிகப் பெரிய, சிறிய நகரம், வேகமாகச் செல்லும் பறவை எது, மிக மெதுவாகச் செல்லும் பறவை எது என்பன போன்ற பல்வேறு பொது அறிவு வினாக்களை, எந்த முறையில் கேட்டாலும் உடனுக்குடன் பதில் அளிக்கிறான் ஐஸ்வந்த்.


சிறுவனின் இந்தத் திறமையைப் பற்றிக் கேள்விபட்ட அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜயராமனின் நண்பர்கள் பலரும் ஜஸ்வந்தை பலவாறாகவும் சோதித்தபோது, உடனுக்குடன் பதிலளித்து ஆச்சரியப்படுத்தினார். மேலும், மடிக் கணினியையும் பயன்படுத்தும் திறமை கொண்ட ஜஸ்வந்த், தானாகவே கணினியில் "பாஸ்வேர்டு' கொடுத்து கேம்ஸ் விளையாடி வருகிறார்.


 சிறுவன் ஜஸ்வந்த் குறித்து அவரது தந்தை ஜயராமன் கூறியது:

ஒன்றரை வயதிலேயே ஜஸ்வந்துக்கு திறமைகள் இருப்பதைக் கண்டறிந்தோம். தொடக்கத்தில் 2 அல்லது 5 கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார். தற்போது 80 நாட்டின் தலைநகரங்களையும், 35 பொது அறிவு வினாக்களுக்கும் உடனுக்குடன் பதில் கூறி வருகிறார்.  இன்னும் பயிற்சியளித்து, 192 நாடுகளின் தலைநகரங்கள், மேலும், அதிகமான பொது அறிவு வினாக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் ஜஸ்வந்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

Source : Dinamani

https://youtu.be/iCvAMXrfNuo<----Click Video by :Thanthi TV



No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...