இன்றைய உலகில் கணினியின் தேவை அவசியம் - கணினியின் தந்தை சார்லஸ் பாப்பேஜ் நினைவு தினம் இன்று (அக்டோபர் 18, 1871).
சார்லஸ் பாபேஜ் (Charles Babbage) டிசம்பர் 26, 1791ல் லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். பெஞ்சமின் பாபேஜ் மற்றும் பெட்ஸி பிளம்லீ டீப் தம்பதியரின் 4 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார் சார்லஸ் பாபேஜ். சார்லஸ் பாபேஜின் தந்தை ஒரு வங்கியாளர் மற்றும் வணிகராக பணியாற்றினார். சார்லஸ் பாபேஜ் தனது ஆரம்பக்கல்வியின் பெரும்பகுதியை தனியார் ஆசிரியர்களிடமிருந்து பெற்றார். பின்னர் 1810ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழத்தில் இணைந்த இவர், கணிதத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். அங்கு அவருக்கு கணிதத்தின் மீதான பற்று அதிகரித்தது. தனது பயிற்றுவிப்பாளரைவிட கணிதத்தைப் பற்றி அதிகம் அறிந்திருந்தார். 1814ம் ஆண்டில், கேம்பிரிட்ஜிலிருந்து சார்லஸ் பாபேஜ் பட்டம் பெற்ற அதே ஆண்டு ஜார்ஜியானா விட்மோர் என்பவரை மணந்தார்.
சார்லஸ்
பாப்பேஜ் பட்டம் பெற்ற பிறகு, அரசு நிறுவனத்தில் வானியல் பற்றிய
விரிவுரைகள் மற்றும் 1816ல், அரசு
சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கணிதவியலாளர்,
கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கணிதப் பாடங்களில் ஏராளமான பிழைகள் இருப்பது கண்டு அவரால்
பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிழைகளைச் சரிசெய்ய ஒரு கருவியை உருவாக்க எண்ணினார்.
அதற்காகவே கணிதத்தில்,
Differential Equations தீர்வு செய்து, தானாகக்
கணக்கிடும் கருவியை 1822 இல் கண்டுபிடித்தார். மேலும் சார்லச்
பாப்பேஜ் 1882ல் வேறுபாட்டியல் நிகர்ப்பாடுகளை தீர்வு செய்யக்கூடிய வேறுபாட்டுப்
பொறி Difference Engine என்னும் எந்திரத்தை உருவாக்கினார்.
இதுவே இன்றைய கணினியின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது.
வேறுபாட்டுப் பொறியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, 1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்து பகுப்பாய்வுப்பொறி Analytical Engine என்ற முதல் கணினியை சார்லஸ் உருவாக்கினார். கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அவருடன் ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான அடா லவ்லேஸ் வடிவமைப்பில் உதவ, ஆணைகள் அடங்கிய நிரலை (Program) உருவாக்கினார். இதன்மூலம் உலகின் முதல் கணினி நிரலர் (Computer Programmer) என்னும் பெருமையை அடா பெற்றார். ஒரு நிமிடத்திற்கு 60 வகையான கணிதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை இந்த நிரலால் தீர்க்க முடிந்தது. இந்த இயந்திரம் நவீன கணிப்பொறி போன்றே இருக்கும் என்பதுதான் அதன் சிறப்பம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும், அதிகாரப்பூர்வமாக 1948 ஆம் ஆண்டில்தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு டிரான்சிஸ்டர் (Transistor) கண்டுபிடிக்கப்பட்டு அதுவரை இருந்த வெற்றிடக் குழல் (Vacuum Tube) மாற்றப்பட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகள் உருவாகின.
மேலும்
வாகனமங்களின் வேகமானி, கண் பரிசோதனைக்கருவி, புகையிரதத்தின் டைனமோ மீட்டர், சீரான
அஞ்சல் கட்டண முறை, கலங்கரை விளக்கு ஒளி, கீறிவிச் ரேகைக் குறியீடு, சூரிய ஒளி
கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி, மணிச்சட்டம், நேப்பியர்
கருவி, பாஸ்கல் இயந்திரம், டிபரன்ஸ்
இயந்திரம் போன்றவற்றையும் கண்டுபிடித்தார். இவர்
கண்டுபிடித்த கம்ப்யூட்டரை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. அதன் எடை
ஆயிரம் கிலோ. அந்தக் கம்ப்யூட்டரின் வேகமும் மிகவும் குறைவு. ஆனால், தற்போதைய சாதாரண கம்ப்யூட்டர்களில் நினைவாற்றல் அந்த முதல்
கம்ப்யூட்டரின் நினைவாற்றலை விட 10 லட்சம் மடங்கு அதிகம். என்னதான்
இன்றைக்கு நாம் நவீன உலகத்தில் பயணித்துகொண்டு இருந்தாலும் நாம் உபயோகிக்கும்
ஒவ்வொரு பொருட்களுமே அந்த காலத்தின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது என்னும்போது
அவர்களின் தொலைநோக்கு பார்வை நம்மை சிந்திக்க வைக்கிறது.
கணினியின்
தந்தை சார்லஸ் பாப்பேஜ் அக்டோபர் 18,
1871ல் தனது 79வது அகவையில், லண்டனில் இவ்வுலகை விட்டு
பிரிந்தார். இவரது மூளை இங்கிலாந்திலுள்ள
Hunterian Museum இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்றைய
உலகில் கணினியின் தேவை அத்தியாவாசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும்
கணினியின் பயனை உணர்ந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கணினி இல்லை என்றால் தற்போது
உலகம் இயங்காது என்றுக்கூட சொல்லலாம் அப்படிப்பட்ட கணினியை முதலில் கண்டு
பிடித்தவர் சார்லஸ் பாபேஜ்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி.
No comments:
Post a Comment