நாளை வானத்தை அலங்கரிக்க வருகிறது நீல நிற நிலவை ('புளூ மூன்') பார்க்க நீங்கள் தயாரா???
ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றும் பெளர்ணமி நிலவான புளூ மூன்
நாளை வானில் தோன்றுகிறது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முழு நிலவு நிகழ்வான பௌர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால்
மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை முழு நிலவு தோன்றலாம். அப்படியாக ஒரே
மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, இரண்டாவதாக தோன்றும் முழு நிலவை ப்ளூ
மூன் அதாவது நீல நிலவு என அழைக்கப்படுகிறது.
இந்த
நீல நிலவு நிகழ்வு தான் நாளை வானில் தென்பட இருக்கிறது. இது போன்ற புளூ மூன் 19 ஆண்டுகளுக்கு முன்பாக வானில் தோன்றியது.
அதன்பிறகு நாளை (அக்டோபர் 31)
முழு நிலவு வானில்
தெரியப் போகிறது. 2001ம் ஆண்டு தென்பட்ட புளூ மூன் மத்திய
மற்றும் பாசிபிக் பிராந்தியத்தில் மட்டுமே தெளிவாக காணமுடிந்தது. ஆனால் நாளை
தோன்றுவதை அனைத்து இடங்களிலும் இருந்து தெள்ள தெளிவாக பார்க்க முடியும். ஆதலால்
தான் நாளைய புளூ மூன் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது. இம்மாதிரியான அரிய நிகழ்வு அடுத்து 2039ம் ஆண்டு தான் வானில் தோன்றும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment