Tuesday, October 6, 2020

அண்ட X-கதிர் வானியலை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற இரிக்கார்டோ ஜியாக்கோனி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 6, 1931).

அண்ட X-கதிர் வானியலை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற இரிக்கார்டோ ஜியாக்கோனி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 6, 1931).

இரிக்கார்டோ ஜியாக்கோனி (Riccardo Giacconi) அக்டோபர் 6, 1931ல் இத்தாலியில் ஜெனோவாவில் பிறந்தார். இவர் வானியற்பியல் ஆய்வு செய்ய, அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் முன்பு மிலான் பல்கலைக்கழகத்தின் முந்தைய இலாரியா பட்டத்தைப் பெற்றார். புவியின் வளிமண்டலம் அண்ட X-கதிரை உட்கவர்ந்துவிடுவதால், X-கதிர் வானியலுக்கு விண்வெளியில் அமைந்த தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. இச்சிக்கலுக்கு தீர்வு கான முனைந்த ஜியாக்கோனி, X-கதிர் வானியலுக்கான தனித்த கருவிகளை வடிவமைப்பதில் ஈடுபட்டார். இவற்றில் ஏவூர்தியக ஒற்றி அல்லது காணிகளை 1950களிலும் 1960களிலும், முதல் X-கதிர் வானியல் செயற்கைக்கோளான உகுருவை 1970களிலும் வடிவமைத்து உருவாக்கினார். இவரது முன்னோடி ஆராய்ச்சிகள் 1978ல் அய்ன்சுட்டீன் வான்காணகத்தில் தொடர்ந்தன. அங்கேயும் பின்னர் சந்திரா X-கதிர் வான்காணகத்திலும் முதல் X-கதிர்வழிப் படம் எடுக்கும் தொலைநோக்கியை வடிவமைத்தார். அது விண்வெளியில் 1999 இல் நிறுவப்பட்டு, இன்றும் தொடர்ந்து இயங்கிவருகிறது. 




ஜியாக்கோனி வானியலின் பிற புலங்களிலும் தன் புலமையை நிலைநாட்டியுள்ளார். இவர் பின்னர் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் முதல் இயக்குநர் ஆனார். இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் இயக்க மையத்தின் இயக்குநரும் ஆனார். மசாட்டோழ்சி கோழ்சிபா, இரேமாண்டு டேவிசு இளவல் ஆகியோருடன் இணைந்து 2002 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றார். இப்பரிசு இவருக்கு "அண்ட X-கதிர்வாயில்களைக் கண்டறிய உதவிய இவரது வானியற்பியலின் முன்னோடி ஆராய்ச்சிக்காகத் தரப்பட்டது". இவர் (1982-1997) கால இடைவெளியில் இயற்பியல், வானியல் பேராசிரியராகவும் 1998 முதல் ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பேராசிரியராகவும், பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் இருந்தார். இவர் (1993-1999) கால இடைவெளியிலைரோப்பிய தென் வான்காணகத்துக்குப் பொது இயக்குநராக இருந்துள்ளார். இவர் அண்மையில் நாசாவின் சந்திரா கதிர் வான்காணகத்தின்சாந்திரா ஆழ்புல- தென் திட்ட முதன்மை புலனாய்வாளராக இருந்தார்.



வானியலுக்கான எலன் பி, வார்னர் பரிசு (1966), புரூசு பதக்கம் (1981), என்றி மோரிசு இரசல் விரிவுரைத்தகைமை (1981),  கைன்மன் வானியற்பியல் பரிசு (1981), அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1982),  இயற்பியலில் வுல்ஃப் பரிசு (1987),  இயற்பியலில் நோபல் பரிசு (2002),  தேசிய அறிவியல் பதக்கம் (2003), கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (2004) போன்ற பதக்கங்களை பெற்றுள்ளார். அண்ட X-கதிர் வானியலை உருவாக்கிய இரிக்கார்டோ ஜியாக்கோனி டிசம்பர் 9, 2018ல் தனது 87வது அகவையில் கலிபோர்னியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...