Monday, November 30, 2020

இன்று வானில் அரிய நிகழ்வு. 2020இன் கடைசி சந்திர கிரகணம்

 இன்று வானில் அரிய நிகழ்வு. 2020இன் கடைசி சந்திர கிரகணம்.

2020ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. அதாவது சூரியன், பூமி, சந்திரன் ஒரு நேர்கோட்டில் இருக்கும்.

இன்றைய சந்திர கிரகணம் இந்தியாவில் 1.04 மணிக்கு தொடங்கி 5.22 வரை நடைபெறும். 3.13 மணிக்கு உச்சத்தில் இருக்கும். இன்றைய சந்திர கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் பார்க்க முடியாது.



இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் மதியம் 1.04 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.22 மணிக்கு முடிவடைகிறது. மாலை 3.15 மணி அளவில் கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளான பாட்னா, ராஞ்சி, கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, புவனேஸ்வர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் இந்த கிரகணத்தை காணமுடியும். 

ஐரோப்பாஆசியாஆஸ்திரேலியாவட அமெரிக்காதென் அமெரிக்கா,பசிபிக் மற்றும் ஆட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடியும். இந்த ஆண்டில் ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 4 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணங்கள்  ஏற்பட்ட நிலையில் இது 2020இன் கடைசி மற்றும் நான்காவது சந்திர கிரகணம். 

சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும். அவை முழு கிரகணம், பகுதி கிரகணம், பெனும்ரல் கிரகணம் ஆகும். ஏற்கெனவே ஏற்பட்ட 3 கிரகணங்களும் பெனும்ரல் வகையை சேர்ந்தவையாகும். பெனும்ரல் கிரகணம் என்றால் பூமியால் சூரியன் பகுதி அளவு மறைக்கப்படும். அப்போது நிலவுக்கு சூரிய வெளிச்சம் போய் சேராது. பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே நிலவுக்கு செல்லும். அதுதான் பெனும்ரல் கிரகணம் ஆகும். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 14-ஆம் தேதி நிகழ்கிறது.

No comments:

Post a Comment

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும...