டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரத்தை கீழ் காணலாம்.
- தமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு
- மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்கும்.
- டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்க்கு அனுமதி.
- வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் தொடரும்.
- கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம்.
- உள் அரங்கில் 200 பேருக்கு மிகாமல் அரசியல் சமுதாய கூட்டங்கள் நடத்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி.
- கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.
No comments:
Post a Comment