✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🟩🟩 பகுத்துண்டு பல்லுயிர் காப்போம்.
🟩🟩🟩🟩🟩🟩
மனிதன் தன் ஆறாம் அறிவை அறிந்து கொண்டு ஐந்தறிவு உள்ள உயிர்களுக்கு அடைக்கலம் தந்து அவற்றை பாதுகாப்பான என்று கடவுளை நம்பினார் ஆதி மனிதனும் அப்படியே செய்து வந்தான்.
நமது முன்னோர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இருந்து வந்தது பஞ்சபூதங்களை வழிபட்டனர் சந்திரனும் சூரியனும் வர்ணனையும் வணங்கி வந்தனர் விநாயகனை ஆனைமுகத்தான் என்று கும்பிட்டனர் விஷமுடைய பாம்புகளை கூட நவக்கிரகங்களில் ஒன்றாக பூஜித்து வந்தனர்.
🟩🟩🟩🟩🟩🟩
நமது இலக்கியங்களும் இயற்கையின் அம்சங்களை போற்றியே எழுதப்பட்டுள்ளன கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பு வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.
🟩🟩🟩🟩🟩🟩
இலக்கியங்கள் இளங்கோவடிகளும் ஞாயிறு போற்றதும் என்று மாமழை போற்றுதும் என்று இயற்கையை வணங்கி சிலப்பதிகாரத்தை ஆரம்பித்திருக்கிறார் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும் மயிலுக்கு போர்வை கொடுத்த போகணும் புறாவுக்கு தன் சதையை கொடுத்த சிபியும் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் தோன்றிய இந்த புண்ணிய பூமியில் இன்றைய மனிதர்களாகிய நாம் இன்று நம்மைச் சுற்றியுள்ள பல உயிர்களை ஆதரிக்கிறோம் இல்லையா சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.
🟩🟩🟩🟩🟩🟩
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை என்கிறார் திருவள்ளுவர்.
🟩🟩🟩🟩🟩🟩
கிடைத்ததை பகுத்துக் கொடுத்து தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலை சிறந்த அறமாகும் என்பதே இதன் பொருள்.
🟩🟩🟩🟩🟩🟩
கிராமப்புறங்களில் சிறு வீடானாலும் சரி பெரிய தோட்டம் ஆனாலும் சரி நாய் பூனை கோழி ஆடு மாடு என்று ஏதாவது ஒரு ஐந்தறிவு உயிரினம் இருக்கும் மக்கள் மகிழ்ச்சியோடு அவற்றுக்கு உணவு அளித்து ஆதரவளித்தனர். நகர்புறம் நகரத்து மனிதர்கள் வீடுகள் பெரியவை ஆனால் மனங்களோ குறுகியவை அவற்றில் அவர்களைத் தவிர வேற உயிர்களுக்கு இடமில்லை. வீடுகள் ஓடு மனங்களும் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு மரம் செடி கொடி வேண்டாம் மிருகங்கள் வேண்டாம். ஆனால் 24 மணி நேரமும் தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும். மரங்கள் இன்றி மலையேறி நீர் ஏது மின்சாரம் எது அடுக்குமாடி குடியிருப்புகளில் புறாக்கள் உள்ளே வர கூடாது, என்று வலை போட்டு கொள்கிறார்கள். நாயும் பூனையும் அலர்ஜி என்று குழந்தைகளை அவற்றின் அருகே அண்ட விடமாட்டார்கள்.
🟩🟩🟩🟩🟩
கிராமத்துக் குழந்தைகள் நாயோடு பூனையோட கட்டிப் புரண்டு விளையாடி ஆரோக்கியமாக இருக்கையில் பாவம் நகரத்து குழந்தைகள் இவற்றை எட்ட நின்று ஏக்கத்தோடு பார்ப்பதோடு சரி.
🟩🟩🟩🟩🟩🟩
கிராமத்துக் குழந்தைகள் தேளோடும் பூரானோடும் சேர்ந்து வாழ்கிறார்கள்.
இவர்களுக்கு அவற்றை தொந்தரவு செய்வதில்லை அவையும் இவர்களை தொந்தரவு செய்வதில்லை. நகரத்து குழந்தைகளோ தேளையும் பூரானையும் பாட புத்தகத்தில் மட்டுமே பார்க்கிறார்கள் பல்லி கரப்பான்பூச்சிக்கும் பயப்படுகிறார்கள்
🟩🟩🟩🟩🟩🟩 இன்னும் பல வேடிக்கை விஷயம் என்றால் நகரத்து மனிதர்கள் சிலர் தங்களுக்கு சிறு பாத்திரங்கள் சோறும் நீரும் வைத்துவிட்டு அதை சாப்பிட வரும் அணிலும் காக்கையும் படம்பிடித்து வலைதளங்களில் எல்லாம் போட்டு ஏதோ பெரிய சேவை செய்து விட்டது போல் பெருமையடித்துக் கொள்கிறார்கள். கிராமப்புறங்களில் அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வு என்பது அவர்களுக்கு தெரிவதில்லை .
🟩🟩🟩🟩🟩🟩
யானை புலி சிறுத்தை பாம்பு மனிதன் ஒன்றாகவே வாழ்கிறார்கள். ஒரே ஆற்று நீரைத்தான் பகிர்ந்து குடிக்கிறார்கள். விலங்குகள் உலவும் நேரத்தில் மனிதன் வெளிவருவதில்லை. மனிதர்கள் நடமாடும் இடத்துக்கு விலங்குகள் வருவதில்லை. ஒரு எல்லை வகுத்துக்கொண்டு மனிதர்கள் மிருகங்கள் நன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இங்கு இப்போது நகரத்துக்கு மனிதனின் எல்லாம் எனக்கே வேண்டும் என்ற பேராசையினால் ஐந்தறிவு ஜீவராசிகளும் பெரும் துன்பத்திற்கு ஆளாகி கொண்டிருக்கின்றன. 20 ஆண்டுகள் முன்பெல்லாம் யானை ஊருக்குள் நுழைவது கிடையாது. இப்போது மட்டும் யானை ஊருக்குள் வருவது ஏன் அவற்றுக்கு நியாயமாக தரவேண்டிய நீ இடத்தையும் நீரையும் உணவையும் மனிதன் அபகரித்துக் கொண்டதால்.
🟩🟩🟩🟩🟩🟩
ஐந்தறிவு ஜீவன்களை தான் நாம் ஒதுக்குகிறோம் ஆறறிவுள்ள சகமனிதனை யாவது ஆதரிக்கிறோமா?
கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். என்றார் திருவள்ளுவர்
உதாரணம்
இல்லை என்று பிச்சை கேட்டு ஒருவன் வருகிறான் என்று வைத்துக் கொள்வோம் அவன் அவ்வாறு கேட்பதற்கு முன் அவமானத்தால் அவனுக்கு பாதி உயிர் போய்விடும். அவன் கேட்டு மற்றொருவன் இல்லை என்று சொல்லும் போது அச் சொல் கேட்டு அவனது மீதி உயிரும் போய்விடும் இல்லை என்று விஷம் போன்ற சொல்லை சொல்கின்றானே அவனது உயிர் எங்கே தான் போய் ஒளிந்து கொள்ளும் என்று வியக்கிறார் திருவள்ளுவர்.
🟩🟩🟩🟩🟩🟩
பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சிக்னலில் காத்திருக்கும் போது வயதான உடல் ஊனமுற்ற ஒரு சிலர் கையேந்தி நம்மிடம் யாசகம் கேட்கும் போது இந்த திருக்குறளை நினைவு கொள்ளவேண்டும். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்து அவர்களது பசியைப் போக்க வேண்டும். இந்த பூமி நமக்கு மட்டுமே சொந்தமல்ல கடவுள் படைத்த அத்தனை ஜீவராசிகளும் சொந்தம் என்பதை நாம் உணரவேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் பல்லுயிர்களை காக்க வேண்டுமென்றால் முதலில் அவற்றை நேசிக்க வேண்டும். சிறு செடிகள் மரங்களை வெட்டும் வீட்டு முன்பு நட்டு வளர்க்க வேண்டும். அவற்றை தேடி வரும் பறவைகள் சிறிது சோறும் தண்ணீரும் வைத்து நம் அன்றாட வேலை ஒன்றாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.
கோடையில் சாலையோரம் வீட்டருகில் மண்சட்டி பதித்து தண்ணீர் ஊற்றி வந்தால் அவை தெருநாய்களின் தாகம் தீர்க்க உதவும். தினம் தினம் தவறாமல் சோறும் நீரும் வைத்துப் பாருங்கள், ஒரு நாள் சிறிது நேரம் தாமதமானால் கூட அணிலும் காக்கையும் வந்து கூவி அழைத்து உணவு கேட்கும். மீனும் கறியும் சாப்பிட்டு விட்டு மீதம் இருக்கும் எலும்புத் துண்டுகளை குப்பைத் தொட்டியில் போடாமல் ஒரு கிண்ணத்தில் போட்டு வெளியே வைத்தால் பூனைக்கு உணவாகும். தொட்டியில் செடிகள் வைத்திருந்தால் கூட அவற்றை தண்ணீர் ஊற்றி விட்டு தண்ணீரை நின்று கவனியுங்கள், தேங்கும் தண்ணீரில் சிறு குளவிகள் தேனீக்கள் வந்து தண்ணீர் குடிக்கும் மரங்கள் அசையும் மழையின் துளிகள் கீதங்களும் சற்றே கவனியுங்கள். நேரம் ஒதுக்குவோம் நேசிக்கப் பழகுவோம் நம்மிடம் இருப்பதை அவற்றோடு பகிர்ந்து கொள்வோம் .
🟩🟩🟩🟩🟩🟩
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🤭🤭🤭🤭🤭🤭
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
💞💞💞💞💞💞
நன்றி: பெருசங்கர், 🚎 ஈரோடு மாவட்டம், பவானி
செல் நம்பர் ((6383487768))📞
🟩🟩🟩🟩🟩🟩
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment