Monday, November 23, 2020

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🏀🏀விளாம்பழம் நன்மைகள்.

 ✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🏀🏀விளாம்பழம் நன்மைகள்.

🏀🏀🏀🏀🏀🏀

விளாம் மரத்தின் பட்டையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமரப்பட்டை, அரிசி திப்லி, தேன். விளாமரத்தின் பட்டை 5 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 5 அரிசி திப்லி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி, சிறிது தேன் சேர்த்து தினமும் 100 மில்லி வரை காலை, மாலை குடித்துவர காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகிறது. 

🏀🏀🏀🏀🏀🏀

விளாம் மரத்தின் இலையை பயன்படுத்தி வாயு பிரச்னை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமர இலைகள், பனங்கற்கண்டு, பால்.

விளாம் மரத்தின் இலைகள் ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதில் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த தேனீரை குடித்துவர வாயு பிரச்னை குணமாகும்.

விளாம்பழம் - இனிது

🏀🏀🏀🏀🏀🏀

விளாமரம் வீட்டில் வளர்க்க கூடியது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன் தருகிறது. உடல் எரிச்சலை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும. வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அல்சரை சரிசெய்கிறது. விளாம் பழத்தை பயன்படுத்தி பசியின்மை, சுவையின்மை, நீர்வேட்கைக்கான மருந்து தயாரிக்கலாம்.

🏀🏀🏀🏀🏀🏀

நன்றாக பழுத்த விளாம் பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர வயிறு உப்புசம், பசியின்மை, சுவையின்மை, ஈரல் பாதிப்பு, இதய கோளாறுகள் குணமாகிறது. பித்த சமனியாக விளங்கி செரிமான கோளாறுகளை சரிசெய்யும். பசியை தூண்டக்கூடிய மருந்தாக விளங்குகிறது.

தொடர்ந்து விளாம்பழம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா...

🏀🏀🏀🏀🏀🏀

விளாம் மரத்தின் இலையை நன்றாக அரைத்து பூசுவதால் அம்மை, அக்கி கொப்புளங்கள், வியர்குரு விலகி தோல் ஆரோக்கியம் பெறும்.  

🏀🏀🏀🏀🏀🏀

விளாம்பழம் பல வியாதிகளை  குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்  புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து  பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்மந்தமான அனைத்து  கோளாறுகளும் குணமாகும்.

🏀🏀🏀🏀🏀🏀

பித்தத்தால் தலை வலி, கண் பார்வை மங்கல், காலையில்  மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை  கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு  அற்ற நிலை, இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில்  கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே, எந்த நோயும்  தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி, பசியை உண்டு பண்ணும்  ஆற்றலும், விளாம்பழத்திற்குஉண்டு.

🏀🏀🏀🏀🏀🏀 

முதியவர்களின் பல் உறுதிக்கு,  விளாம்பழம் நல்ல மருந்து

🏀🏀🏀🏀🏀🏀

பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் முக சுருக்கம் வறட்சிக்கும் முக பொலிவிற்கு இதை விட சிறந்த மருந்தோ கிரீம்களோ கிடையாது அனுபவத்தில் பலபேர் உணர்ந்தது.

வாசகர் பக்கம்: வைட்டமின் நிரம்பிய விளாம்பழம் | வாசகர் பக்கம்: வைட்டமின்  நிரம்பிய விளாம்பழம் - hindutamil.in

தேவையான அளவு விளாம்பழம் விழுது அத்துடன் பசும்பால் அல்லது மோரை கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி ஒருவாரம் தொடர்ந்து செய்து வந்தால் இழந்த பொலிவு மீண்டு முகத்தில் இளமை ததும்பும்

🏀🏀🏀🏀🏀🏀

மேலும் குளியல் பொடியாக இதன் ஓட்டை பயன்படுத்தும் போது முட்டி கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்பு காணமல் போகும்.

🏀🏀🏀🏀🏀🏀

இதன் சதைகளை எடுத்து பனைவெல்லம் சேர்ந்து பனியில் வைத்து காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சியும் குணமாகும் இதன் மூலம் உடல் வலிமை பெரும் பழங்களில் விளாம்பழம் முதன்மையானது.

🏀🏀🏀🏀🏀🏀

பல் எலும்பு சதைகள் போன்ற உடல் நல குறைபாடுகள் உடையவர்களுக்கு வெளாம்பழம் மிகச்சிறந்த பழம் இவற்றில் கால்சியம் விட்டமின் பி12 அதிகம்.

🏀🏀🏀🏀🏀🏀

மேலும் மாதவிடாய் கோளாறுகள் அதிஉதிரபோக்கு வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதன் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விளாம்பழத்தின் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா? | www.theevakam.com

பெண்களுக்கு மார்பகம் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்

🏀🏀🏀🏀🏀🏀

 🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்

🌹🌹🌹🌹🌹🌹

நன்றி : பெருசங்கர், 🚎 ஈரோடு மாவட்டம், பவானி

செல் நம்பர் ((6383487768))📞

வாட்ஸ்அப்   எண் ((7598258480))

🏀🏀🏀🏀🏀🏀

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...