✍️கவிதை ✍️
🙏விவசாயி 🙏- இரஞ்சிதா தியாகராஜன்.
வானம் பார்த்து ,
வளி மேல் விழி வைத்து,
மழை மேல் மனதை வைத்து ,
உழைப்பார் நம் விவசாயி....
வெய்யோன் சுடரால் நாளெல்லாம் வெந்து,
வெகுளித்தனம் மனதைக் கொண்டு,
சேறு, சகதிகளை உடலாய்க் கொண்டு
உழைக்கிறாய்....
உலகமெங்கும் உலைக்கு வழி வகுக்கிறாய்....
முட்களை மெடலாக பாதத்தில் குத்திக் கொண்டு,
மூன்று வேளை உணவுக்காக உழைப்பை முழு மூச்சாய்க் கொண்டு உழைக்கிறாய்....
முத்து முத்தாய் வியர்வை,
கொத்து கொத்தாய் நெல்மணிகள்....
பயன் என்ன?????
உட்கார்ந்திருந்தோர் உணவின் மதிப்பு அறியாமல் சிந்துகிறான்....
உழைத்த விவசாயி பசியால் கண்ணீர் சிந்துகிறான்....
இறுதியில்....
உழைத்த எங்கள் கருப்பு
நிலா....
வீதியில் செல்கிறது பட்டினியில் உலா...
இளைஞர்களே!!!
இந்தியாவின் தூண்களே !!!
அனைவரின் கொடிய எதிரி பசியை தோற்கடிப்போம்....
விவசாயிகளை காப்போம்.....
பிறகு விஞ்ஞானம் ஏற்போம்!!!...
No comments:
Post a Comment