Sunday, November 15, 2020

✍️கவிதை ✍️ 🍻மது ஒழிப்போம்🍻 - இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

    🍻மது ஒழிப்போம்🍻 - இரஞ்சிதா தியாகராஜன்.



மது... மது....

எவ்வாறு உன்னை அழிப்பது...????? 


நீயோ நகைக்கிறாய் நன்றாக.... 

நகரமாக்கிராய் நாட்டையே அழகாக... 


பால் வாங்க பணமில்லை.... 

பச்சிளம் குழந்தை பசியாற வழியில்லை.... 

மனைவி மனமெல்லாம் வேதனையிலே.... 

கணவன் பணமெல்லாம் போதையிலே... 


தெருதோறும் தொடக்கப்பள்ளி ஊர்தோறும் உயர்நிலைப் பள்ளி.... 

          அக்காலம் 

தினந்தோறும் திருவிழா தோறும் சின்ன சாராயக்கடை ....

          இக்காலம் 


தாமரை மலரோ குளத்திலே.... 

தரமான இளைஞர்களோ சிலர் குடிபோதையிலே.... 


குற்றங்கள் பல நடக்கிறது... 

பல்வேறு குடும்பங்களையோ சிதைக்கிறது... 


சிந்திப்போம்.... சிரிதாக..... 

சிரிக்க வைப்போம் குடும்பங்களை பெரிதாக.... 

Red Wine GIF - Red Wine Drinking - Discover & Share GIFs

மது ஒழிப்போம்...

மானிடம் காப்போம்....


♨️ தமிழகத்தில் 2 நாளில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை!

🍺மது நாட்டுக்கும் வீட்டுக்கும்☠️ உயிர் கேடு!'

தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை. தமிழகத்தில் வெள்ளி, சனிக் கிழமைகளில் ரூ.465.79 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.465.79 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.103.82 கோடிக்கு மது விற்பனை. திருச்சி மண்டலத்தில் ரூ.95.47 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. சென்னை மண்டலத்தில ரூ.94.36 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...