Saturday, November 7, 2020

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டதமிழர்கள்.

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள்.

                      

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் தொகுக்கப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். 21 துறைகளில் பணியாற்றும் சுமார் ஒரு லட்சம் சிறந்த விஞ்ஞானிகளை கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 1,594 மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.

 

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஜான் பி.ஏ. அயோனிடிஸ், நியூ மெக்ஸிகோவின் சைடெக் ஸ்ட்ராடஜீஸ் இன்க் நிறுவனத்தை சேர்ந்த கெவின் போயாக் மற்றும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிசர்ச் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜெர்யன் பாஸ் ஆகியோரால் சிறந்த உலகளாவிய விஞ்ஞானிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த பட்டியல் குறித்த அறிக்கை ப்ளோஸ் பயோலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 36 பேராசிரியர்களுடன் சென்னை ஐ.ஐ.டி முன்னிலை வகிக்கிறது. திருச்சி என்.ஐ.டியின் 7 விஞ்ஞானிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 பேரும், பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து 8 பேரும், தமிழக மத்திய பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களிலிருந்து தலா இரண்டு பேரும் பெரியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து தலா ஒருவரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...