மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்கிலி மாவட்டத்தில் மட்கியால் என்ற இன செம்மறி ஆடுகள் மிகவும் பிரபலம். மற்ற ஆடுகளைக் காட்டிலும் இந்த ஆடுகள் உயரமாகவும், பெரிதாகவும், கம்பீரமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி மற்ற இன ஆடுகளை விட அதிக வளர்ச்சி விகிதமும் கொண்டுள்ளன. இந்த ஆட்டின் இறைச்சியும் உயர்ந்த தரத்தை கொண்டிருக்கிறது. எனவே இந்த இன ஆடுகளுக்கு அங்கு கடும் கிராக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில்
உள்ள அட்பாடி என்ற இடத்தில் பாபு மெட்காரி என்பவர் இத்தகைய 200 ஆடுகளை
வளர்த்து வருகிறார். சமீபத்தில் அங்கு நடந்த கண்காட்சிக்கு தனது ஆடுகளில் ஒன்றை
கொண்டு சென்றிருந்தார் பாபு. அந்த ஆட்டுக்கு அவர் தற்போது சூட்டியுள்ள பெயர் மோடி.
இந்த ஆட்டை கண்டு பிரமித்துப்போன ஒருவர் அதை ரூ.70 லட்சத்துக்கு விலை பேசி உள்ளார். ஆனால் அதை
விற்க உரிமையாளர் பாபு மெட்காரி விரும்பவில்லை. ஆனால் அந்த நபரோ தொடர்ந்து
வற்புறுத்தியபோது, பாபு மெட்காரி அந்த ஆட்டுக்கு ரூ.1.5 கோடி விலை என கூறி உள்ளார். அதன்பிறகே
அந்த நபர் அங்கிருந்து சென்றாராம்.
ஆட்டின் பெயர் காரணம் குறித்து தெரிவித்த பாபு மெட்காரி, “பிரதமர் மோடி எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக இருப்பது போல, இந்த ஆடு எடுத்துச் செல்லப்படுகிற இடங்களில் எல்லாம் எனது செல்வாக்கை நிலைநிறுத்தி, பெயர் பெற்று வருவதால் சர்ஜா என்று ஏற்கனவே சூட்டி இருந்த பெயரை மோடி என மாற்றினேன்” என்றாராம்.
மேலும், நாங்கள் 2, 3 தலைமுறைகளாக ஆடு
வளர்ப்புத் தொழில் செய்கிறோம். 2
ஆண்டுகளில் இந்த மோடி ஆட்டினால் நாங்கள் நல்ல
லாபம் பெற்றுள்ளோம். இந்த ஆட்டின் மூலம் பிறக்கிற குட்டி ஒவ்வொன்றும் ரூ.5 லட்சம் முதல்
ரூ.10 லட்சம்
வரை விலை போகிறது. என்னிடம் எத்தனையோ ஆடுகள் இருந்தாலும், இந்த ஆடுதான்
எனக்கு ஸ்பெஷல். அதன் தோற்றம், இனப்பெருக்க திறன் எல்லாமே அசத்தல்” என நெகிழ்ந்து பேசினார் பாபு
மெட்காரி.
No comments:
Post a Comment