✍🏻 🚹🚹இயற்கை வாழ்வியல் முறை🚹🚹நாவும் சுவையும்.
🚹🚹🚹🚹🚹🚹
மனித நாவின் உயிர் மூச்சு என சுவையை சொல்லலாம். சுவை அறியும் திறன் மட்டும் இல்லை என்றால் பரிணாம வளர்ச்சியில் ஒரு கேப்ஸ்யூலில் அடங்கிவிடும் மூன்று வேளை உணவும்! சுவை மொட்டுக்கள்தான் உமிழ்நீரைச் சுரக்க வைக்கின்றன; உணவை செரிக்கவும் செய்கின்றன.
🚹🚹🚹🚹🚹🚹
ஹார்வர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் எட்வின் ஜி. போரிங் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றின் மூலம் சுவையின் முக்கியத்துவம் ஆவணப்படுத்தப்படுகிறது. அவரின் மூல ஆய்வுக் கட்டுரையில் நாவின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு மூல சுவையை சுவை மொட்டுக்கள் மூலம் உணர்வதாக முடிவெடுக்கிறார்
🚹🚹🚹🚹🚹🚹
ஒருவர் புளியம் பழம் சாப்பிட்டால் நமக்கு கடைவாயில் எச்சில் சுரக்கும். கசப்பு உடம்பை உலுக்கும், இனிப்பை பார்த்தால் குழந்தை போல துள்ளிக் குதிப்போம். உடல் முழுவதும் குதூகலத்தை உண்டாக்கும் இனிப்பு. இப்படியாக சுவையை நாவின் வழியாக முறைப்படுத்துகிறார். பெரும்பாலும் சுவை குறைபாடு பிறக்கும்போதே யாருக்கும் வருவதில்லை.
🚹🚹🚹🚹🚹🚹
சிறு வயதில் மிகவும் அபாரமாகவே செயல்படுகிறது. பிற்பாடு ஒரே உணவை அதிகம் சாப்பிடும்போது சுவை உணர்வு மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது. உதாரணமாக வெற்றிலை பாக்கு அதிகம் போடுபவர்களுக்கு சுவை அறியும் உணர்வு குறைந்துகொண்டே வரும். வெற்றிலை போட வேண்டும் என்பதற்காகவே மற்ற உணவை சாப்பிடக் கூட தவிர்க்கத் தயாராவார்கள்.
🚹🚹🚹🚹🚹🚹
நாவின் பின்புறம் கசப்பு சுவை.
நாவின் பின்புற இரு விளிம்புகள் புளிப்பு சுவை.
நாவின் முன்புற இரு விளிம்புகள்: உவர்ப்பு சுவை.
நாவின் முன்பகுதி இனிப்பு சுவை.
நாவின் நுனிப்பகுதி: துவர்ப்பு
🚹🚹🚹🚹🚹🚹
சமைப்பவர் எப்படி கலைஞனோ அப்படி அதை நன்றாக ருசித்துச் சாப்பிடுபவன்/ள் மகா கலைஞன்! மாங்காய் குழம்பு, பாயசம், பாகற்காய் பொரியல், வாழைப்பூ கூட்டு, கார வறுவல், வடுமாங்காய்... என உணவில் அறுசுவையையும் கவனித்து சமைக்கிறோம். ருசித்து மகிழ்ந்து சாப்பிடுகிறோம்.
நாம் உண்ணும் உணவில் தினசரி அறுசுவைகளும் சரியான அளவில் இருந்தாலே ஆரோக்கியம் நிச்சயம்.
அதென்ன அறுசுவை?
🚹🚹🚹🚹🚹🚹
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு... இந்த ஆறு சுவைகள்தான் உணவுக்கு அடிப்படை.
தொண்டைப் பகுதி வரை இயங்கும் நுண் நாளங்கள்தான் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். இந்த அறுசுவைகளும் சரியாக இயங்க வேண்டும். குறிப்பாக கசப்பு, உவர்ப்பு. இதைப் புரிந்து கொள்ளாமல் பலர் இன்று குறிப்பிட்ட சில சுவைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பதில்லை. தொடர்ந்து ஒரேவிதமான சுவையுடைய உணவை அதிகம் உண்பது ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.
🚹🚹🚹🚹🚹🚹
காரத்தை அதிகம் விரும்புகிறோம். அது மூல நோய் மற்றும் மலச்சிக்கலை உண்டாக்குகிறது. இனிப்பை அதிகம் சுவைக்கிறோம். உடல் பருமன், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறோம். இப்படி பட்டியலிடலாம்.எல்லா நாட்டு மருத்துவமும் சொல்வது ஒன்றைத்தான். சாப்பிடும்போது ருசித்துச் சாப்பிட வேண்டும். நாவில் படும்போது அரை நொடிக்கும் குறைவாகத்தான் ருசி இருக்கும். அதை நன்கு கவனித்து சாப்பிட வேண்டும்.
இதனால்தான் சாப்பிடும்போது பேசக்கூடாது, எதையும் யோசிக்க வேண்டாம் என்கிறார்கள்.
🚹🚹🚹🚹🚹🚹
இனிப்பு: மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சுவை இதுதான். இந்தச் சுவையை நாம் மிதமான அளவு உண்டு அனுபவிக்கும்போது, அது உடலுக்கு பலத்தைத் தரும். இன்று நாம் சாப்பிடும் உணவுகளிலேயே இனிப்புச் சுவை அதிகம் இருக்கிறது. இதனால் செயற்கை இனிப்பு சேர்ந்த ஸ்வீட் வகைகளை உண்ணும்போது, உடலில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை சேர்ந்துவிடும். தொப்பை, உடல் பருமன், பித்தம், வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
🚹🚹🚹🚹🚹🚹
புளிப்பு: சாப்பிட்ட உணவு செரிக்கவும் நல்ல ஜீரண சக்தியைத் தந்து, வயிற்றைச் சுத்தப்படுத்தும் பணியையும் புளிப்பே செய்கிறது. பசியைத் தூண்டும் நரம்புகளை இது வலுவாக்கும். ஆனால், புளிப்பை அதிகம் சாப்பிட்டால், வயிற்றுக் கோளாறு, இரத்த அழுத்தம், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு.
எலுமிச்சை, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் உள்ள புளிப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.
🚹🚹🚹🚹🚹🚹
உவர்ப்பு: மற்ற சுவைகளைச் சமன்படுத்தி நாவுக்குச் சுவையைத் தரக்கூடிய பணியை உவர்ப்பு செய்கிறது. ஆனால், இது உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்பதால் மிதமான அளவு உண்ணலாம். இதனால், உடலில் வியர்வை பெருகி இரத்தம் சுத்தமடையும். அதிகமானால் வாதம், உடலின் உள் உறுப்புகள் பாதிப்பு அடைதல், முடி நரைத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
கடுக்காய், கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உள்ள உவர்ப்புச் சுவை உடலுக்கு மிகவும் நல்லது.
🚹🚹🚹🚹🚹🚹
கைப்பு (கசப்பு): உடலுக்கு அதிக நன்மையைத் தரக்கூடிய கசப்பை பலரும் வெறுத்து ஒதுக்குகிறார்கள். ஆனால், வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் சிறந்த கிருமிநாசினி இது. தோல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தரும். இரத்தத்தைச் சுத்தம் செய்யும். இந்தச் சுவை அதிகமானால் உடல் உறுப்புகள் சோர்வடைந்துவிடும்.
பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், எள், வேப்பம்பூ போன்றவற்றில் உள்ள கசப்பு, உணவில் சேர்க்கத் தகுந்தது.
🚹🚹🚹🚹🚹🚹
கார்ப்பு (உறைப்பு): இந்தச் சுவை நுனிநாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்றவற்றில் நீர் வரச்செய்யும். மிதமாகப் பயன்படுத்துவது ஜீரணத்துக்கு உதவும். அதிகமானால் வயிறு மற்றும் குடல்பகுதியில் புண்களை உண்டாக்கும்.
பூண்டு, மிளகு காரச் சுவைக்கு ஏற்ற பொருள்.
🚹🚹🚹🚹🚹🚹
துவர்ப்பு: மெதுவாக ஜீரணமாகக்கூடிய இந்தச் சுவை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கல்லீரல், கணையம், சிறுநீரகத்துக்கு சிறந்தது. பித்தத்தைச் சமன்படுத்தக் கூடியது. அதிகமானால் நாக்கு தடிக்கும். வாயுவை அதிகப்படுத்தும். வாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். வாழைக்காய், மாதுளை, மாவடு, அத்திக்காய் போன்ற காய் வகைகள் அனைத்திலும் இயற்கையாகவே உள்ள துவர்ப்புச் சுவை, உடலுக்கு நல்லது.
🚹🚹🚹🚹🚹🚹
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🦚🦚🦚🦚🦚🦚
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚🦚
நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
(( செல் நம்பர்)) (( 6383487768))
(( வாட்ஸ் அப்)) (( 7598258480 ))
🦚🦚🦚🦚🦚🦚
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH : 9750895059
No comments:
Post a Comment