புரெவி புயல் - நாளை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை
வங்கக் கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலையில் கரையை கடந்து தற்போது பாம்பனுக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மணிநேரத்தில் புரெவி புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புயலால் ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய பணிகள் தவிர பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு ஈடாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment