Tuesday, December 1, 2020

ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்..

 ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்..


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவினை தொடர்ந்து, தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் இன்று முதல் (டிசம்பர் 1) அமலுக்கு வந்துள்ளது. ஆக இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களும் 10,000 ரூபாயினை எடுக்க வேண்டுமானால், ஓடிபியை பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
ரூ.10,000 மேல் எடுத்தால் ஓடிபி சரி விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்? 
இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள், ஏடிஎம்மில் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும்பட்சத்தில் ஒடிபியை பதிவு செய்ய வேண்டியிருக்கும். இந்த ஓடிபியானது வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். எனினும் இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே, இந்த விதிமுறைகள் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PNB 2.0 ஏடிஎம்களுக்கு மட்டும் இந்த விதிகள் 
கடந்த ஏப்ரல் முதல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய இரு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூன்று வங்கிகளும் இணைந்த பின்னர் PNB 2.0 என்று அழைக்கப்படுகிறது. ஆக PNB 2.0 ஏடிஎம்களில் பணம் எடுப்போருக்கு இந்த ஓடிபி அவசியம் தேவைப்படும். மற்ற ஏடிஎம் மூலம் பணம் எடுப்போருக்கு இந்த விதிகள் பொருந்தாது.
மோசடிகளை தடுக்க நடவடிக்கை ஏடிஎம் மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்கும் விதமாக பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றையும் பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் ஓடிபி மூலம் எப்படி பணம் எடுப்பது என்பதனையும் தெளிவாக காட்டியுள்ளது.

எஸ்பிஐ-யிலும் இதே வசதி முன்னதாக எஸ்பிஐ 24 மணி நேரமும் OTP மூலம் பணம் எடுக்கும் வசதியினை அறிவித்தது. இந்த சேவை விரிவாக்கமானது செப்டம்பர் 18 முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது. இது ஏடிஎம் மோசடிகளை குறைக்க வழிவகுக்கும். அதோடு மக்களின் பணமும் பாதுகாப்பாக இருக்க, இந்த நடைமுறை வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Tamil.goodreturns.in

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...