✍🏻 🍔🍔இயற்கை வாழ்வியல் முறை🍔🍔தேனும் தினையும்-சமைக்காத உணவுகள்.
🍔🍔🍔🍔🍔🍔
தேனும் தினை மாவும் கனிந்த பழங்களும் பசுமையான காய்கறிகளும் சாப்பிட்டு வளர்ந்த உணவு மரபு நம்முடையது. ஆனால், இன்று பீட்சா, பர்கர் என நமது உணவுக் கலாசாரம், அதற்கு எதிர்த் திசையில் வந்து நிற்கிறது. அதே சமயம் ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதைப்போல உணவுப் பழக்கமும் பலவாறாகச் சுற்றிவந்து, மறுபடியும் சமைக்காத உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற உடல் நல விழிப்புஉணர்வை நோக்கித் திரும்பியிருக்கிறது. தீங்குகள் இல்லாதது, சத்துக்கள் நிறைந்தது என பல காரணங்களுக்காக இன்று சமைக்காத உணவு பலராலும் சாப்பிடப்படுகிறது. இது ஓர் ஆரோக்கியத் திருப்பம்தான். உண்மையில் மனித உடல், சமைக்காத உணவுகளையே தன்னியல்புடன் ஏற்றுக்கொள்ளும் திறன்கொண்டதாக இருந்தது.
🍔🍔🍔🍔🍔🍔
ஆனால், பல காரணங்களால் மனிதர்கள் பச்சை உணவுகளைக் கைவிட்டு, சமைத்த உணவுகளுக்கு மாறிவிட்டார்கள். மனித உடலின் மரபணுவும் அதற்கு ஏற்ப தன்னை ‘அப்டேட்’டிக்கொண்டுவிட்டது. உண்மை இப்படியிருக்க திடீரென சமைக்காத உணவுகளின் பக்கம் திரும்பினால், அதை ஏற்றுக்கொள்ள மனித உடல் சற்றே தடுமாறலாம். எனவே, சிறிது சிறிதாக சமைக்காத உணவுக்குப் பழகுவதே சிறந்தது.
🍔🍔🍔🍔🍔🍔
சமைக்காத உணவுகளை உண்ணும்போது நீர்ச்சத்து, நீரில் கரையும் விட்டமின்கள், நார்ச்சத்து, கனிமங்கள், தனிமங்கள், புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் என, பல நன்மைகள் உடலுக்குக் கிடைக்கின்றன. உடல் எடையும் குறைகிறது. இந்த வகை உணவுகளில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால், உணவு மூலம் கிடைக்கும் ஆற்றல் குறைவாகத்தான் இருக்கும்.
🍔🍔🍔🍔🍔🍔
சமைக்காத இயற்கை உணவுகளில் பிரதானமானது பழங்கள். அடுத்தடுத்த இடம் காய்கறிகள், கொட்டை வகைகள், பூ வகைகள் போன்றவற்றுக்கு உண்டு. பழங்களைப் பொறுத்தவரை தோலுடன் உண்ண முடிந்தவற்றை தோலுடனும், மற்றவற்றை தோல் நீக்கியும் உண்ண வேண்டும். சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழங்களை நீரில் சுத்தப்படுத்தி, கடித்துச் சாப்பிடலாம். பலா, அன்னாசி போன்ற பழங்களின் தோலை நீக்கித்தான் சாப்பிட்டாக வேண்டும். இதுபோன்ற பழங்களை உண்ணும்போது, தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்தும் உண்ணலாம். அது ஜீரணத்தை அதிகப்படுத்தி முழு ஆற்றலையும் உடலுக்குத் தரும்.
🍔🍔🍔🍔🍔🍔
காய்கறிகளில், நீர் நிறைந்த காய்களும் மென்மையான காய்களும் சமைக்காமல் உண்ணத் தகுந்தவை. வெண்பூசணி, வெள்ளரி, மஞ்சள் பூசணி, விதை நீக்கிய பிஞ்சு சுரைக்காய், கோவக்காய், சின்ன வெங்காயம், பிஞ்சு கத்திரிக்காய், வெண்டை, கேரட், கோஸ், பீட்ரூட், முள்ளங்கி… போன்றவற்றை அப்படிச் சாப்பிடலாம். முக்கியமாக இவை அனைத்தும் ரசாயனம் இல்லாமல் விளைவிக்கப்பட்டதாக இருப்பது மிகவும் அவசியம். இல்லை எனில் பூச்சிக்கொல்லிகளை நேரடியாகச் சாப்பிடுவதுபோல் ஆகிவிடும். எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது, அது சமைக்காத உணவின் செரிமானத்தை ஊக்குவிக்கும். பீர்க்கன், புடலை, பாகற்காய், அவரை, பீன்ஸ், கொத்தவரை, சுண்டக்காய், வாழைக்காய் போன்றவற்றை சமைத்து உண்பதே சிறந்தது.
🍔🍔🍔🍔🍔🍔
புரதச் சத்து மிகுந்த பருப்பு வகைகளை ஊற வைத்தும், முளைகட்ட வைத்தும் உண்ணலாம். தானியம், பயிறு வகைகளை முளைகட்ட வைக்கும்போது சிறுமுளை, அதாவது வெண்மையான சிறுமுளை வெளியில் தெரிந்தவுடன் தண்ணீரில் நன்கு அலசிவிட்டு உண்ண வேண்டும். அந்த முளை பெரிதாக வளரும் வரை விடக் கூடாது. பயிறு வகைகளில் எளிதில் ஜீரணமாகும் குணமுடைய பச்சைப் பயிறு, கொள்ளு, உளுந்து, நரிப் பயறு, தட்டைப் பயிறு போன்றவற்றை உண்ணலாம். சிறு தானியங்களில் கம்பு, கேழ்வரகு, சோளம் மட்டுமே முளைகட்டி உண்ண உகந்தது. வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்றவை முளைகட்டி உண்ண ஏற்றது அல்ல. முளைகட்டி உண்ணும் சிறுதானியப் பயிறு வகைகளில் புரதம், இரும்பு, நார்ச்சத்து நிறைந்திருக்கின்றன. இவற்றுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள், இஞ்சித் துருவல் கலந்து உண்ணும்போது ஜீரணக் கோளாறு நீங்கும்.
🍔🍔🍔🍔🍔🍔
இயற்கை உணவுகளில் உடலுக்குத் தேவையான கொழுப்பைக் கொடுப்பது, கொட்டை வகைகள்தான். நிலக் கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உலர் பழ வகைகள், அத்தி, பேரீச்சை, தேங்காய், வால்நட், உலர் திராட்சை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றை பழங்கள் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து அளவாக உண்ண வேண்டும். இவை உடலுக்கு ஆற்றல் தரும்; ரத்த உற்பத்தியைத் தூண்டும்; தசையின் பலத்தைப் பெருக்கும்.
🍔🍔🍔🍔🍔🍔
ரோஜா, செம்பருத்தி, ஆவாரம் பூ, வேப்பம் பூ போன்றவையும் இயற்கை உணவுகள்தான். ரோஜா பூவைச் சமைக்காமல் அப்படியே அதன் இதழ்களைச் சாப்பிடும்போது, உடல் புத்துணர்ச்சி பெறுகிறது; ரத்தம் விருத்தியாகிறது. செம்பருத்திப் பூ, தலை முடியை உறுதியாக்குகிறது. ஆவாரம் பூ தோல் வியாதிகளைத் தடுக்கிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. வேப்பம் பூ செரிமானத்தை அதிகப்படுத்தி, நஞ்சை நீக்கி, பித்தத்தைக் குறைக்கிறது. ஆகையால்தான் உகாதி பண்டிகைக் காலங்களில் ரசத்திலும், பஞ்சாமிர்தத்திலும் வேப்பம் பூ சேர்க்கப்படுகிறது.
🍔🍔🍔🍔🍔🍔
பச்சையம் நிறைந்த கீரை வகைகளை சமைக்காமல் உண்ணக் கூடாது. ஆனால், மிகக் குறைந்த அளவில் துளசி, கொத்தமல்லி, திருநீற்றுப் பச்சை, கற்பூரவல்லி, புதினா போன்றவற்றை உண்ணலாம். இயல்பாக கீரைகள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளைச் சமைக்காமல் உண்ணும்போது செரிமானக் கோளாறு ஏற்பட்டு, குடலில் அலர்ஜி உருவாகி, ரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
🍔🍔🍔🍔🍔🍔
இயற்கை உணவு விரும்பிகள் அருகம்புல்லையும் ஒதுக்குவது இல்லை. அதன் கனுக்களை நீக்கிவிட்டு, இலையையும் தண்டுப் பகுதியையும் இடித்தோ, அரைத்தோ, சாறு எடுத்துக் குடிப்பதே சிறந்தது. இதனால் உடலில் நஞ்சு நீங்குகிறது. ரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது. பொதுவாகவே வாழைத்தண்டு சாற்றை அருந்தக் கூடாது. ஆனால், மருத்துவரின் நேரடிப் பரிந்துரையின் பேரில் அருந்தலாம். சமைக்காத உணவில் நெல்லிக்கனி சாறே சிறந்தது. அதாவது நெல்லிக்காய் உருண்டையாக இருக்கும். அது கனியாகும்போது சிறு மேடு – பள்ளங்கள் உருவாகும். அப்போது அதில் இருந்து சாறு எடுத்துக் குடிக்கலாம். இதுபோன்ற சாறு வகைகளை ஒன்றுடன் ஒன்று கலந்து குடிப்பது தவறு. ஒரு நாளைக்கு ஒன்று என தனித்தனியே அருந்தலாம். பாகற்காய் சாறு பித்தத்தை அதிகமாக்கும் தன்மை கொண்டது. அதன் பச்சையத்தை ஜீரணிக்க இரைப்பை சிரமப்படும். எனவே, பாகற்காய் சாற்றைத் தவிர்ப்பது நலம்.
🍔🍔🍔🍔🍔🍔
இப்படி வகை வகையான சமைக்காத உணவுகளை, நன்கு பசித்த பின்பு உண்பதே சரியானது. நன்றாக மென்று அரைத்து விழுங்க வேண்டும். உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்னும் தண்ணீர் அருந்தக் கூடாது. அவசியம் தண்ணீர் குடித்தாக வேண்டும் எனில், சிறிது அளவு குடிக்கலாம். காய்கறிகளையும் கனிகளையும் தனித்தனி உணவு வேளைகளில்தான் உண்ண வேண்டும். இரண்டையும் ஒன்றுசேர்க்க வேண்டாம். காரணம், பழத்தின் செரிமானத் தன்மையும் காய்களின் செரிமானத் தன்மையும் வெவ்வேறானது. ஒன்றாகச் சாப்பிட்டால், ஜீரணக் கோளாறுதான் ஏற்படும்.
🍔🍔🍔🍔🍔🍔
அடுப்பு இல்லாமல், நெருப்பு இல்லாமல், எண்ணெய் இல்லாமல் உள்ளது உள்ளபடியான சமைக்காத உணவுகள், உடலை நோய் அண்டாமல் பாதுகாக்கும்!
🍔🍔🍔🍔🍔🍔
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🤭🤭🤭🤭🤭🤭
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
💞💞💞💞💞💞
நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
(( செல் நம்பர்)) (( 6383487768))
(( வாட்ஸ் அப்)) (( 7598258480 ))
🍔🍔🍔🍔🍔🍔
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
No comments:
Post a Comment