Sunday, December 20, 2020

✍️கவிதை ✍️ என் அன்பான ஆசிரியை... இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

 என் அன்பான ஆசிரியை... இரஞ்சிதா தியாகராஜன்

கல்லாய் இருந்த என்னை 

இரசிக்கும் சிற்பமாய் மாற்றினாய்... 


மண்ணாய் இருந்த என்னை 

மதிக்கும் சிலையாய் வடிவமைத்தாய்... 


துவண்டு கிடந்த என்னை 

துணிவாய் மாற்றினாய்... 


பள்ளிக்கூடத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் கிடைக்காத தவமே!!! 


கல்லூரியில் எனக்குக் கிடைத்த வரமே!!! 

திறமை இல்லை என அனைவரும் திட்டிய என்னை... 

தினந்தோறும் ஊக்குவித்த என் சிறந்த  அன்னை... 


ஆசிரியரைக் கண்டால் அயல் நாடு தூரத்திற்கு விலகிச் செல்லும் நான்... 

ஆசிரியரின் அன்பு, அருமையை உணர்ந்தேன் உங்களினால்.... 


என் விழிகளெல்லாம் ஈரம் ...

நீங்கள் என்னை பிரிந்த அந்த நேரம்.... 


மழை நின்றபின் தூரல் போல் 

என்னை பிரிந்த பின் என்றும் நான் உன்னுடன் என்கிறீர்கள்... 


முடிவில்லா உங்கள் புகழை..., 

என் பேனா முனையில் முடிக்கிறேன்... 


உங்கள் வார்த்தைகளை 

சுமந்து 

வாழ்க்கையோடு போராடுகிறேன்... 

வெல்வேன் என்ற நம்பிக்கையில்... 


ஆசிரியப் பணியே அறப்பணி!!அதற்கே உன்னை அற்பணி!!

என எங்களுக்காக உழைத்த என் ஆசிரியையே!!


என்னில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய எங்கிருந்து வந்தாயோ??


கணிதத் துறையென சொன்னாயோ!!! 

ஆசிரியை அனிஷ் 

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

1 comment:

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...