தமிழக தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் மானியம் – ஜன.25க்குள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொழில் முனைவோர்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பெறும் சரிவை சந்தித்தன. இதன் விளைவாக பலரும் வேலை இழந்தனர். தற்போது நோய்தொற்று குறைந்துள்ள நிலையில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் வேலையிழந்த பலர் மீண்டும் வேறு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்காமல் சுயதொழில் செய்ய முடிவெடுத்து களத்தில் இறங்கி உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
தற்போது தமிழக அரசு ஸ்டார்ட் அப் தொடக்க மானிய திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 10 தொழில் முனைவுத் திட்டங்களுக்கு 10 லட்ச ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. இதற்காக வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து முழு தகவல்களை அறிய www.startuptn.in என்ற இணைய முகவரியிலோ அல்லது admin@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் startuptn.in/forms/tanseed என்ற இணைய பக்கத்தில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
No comments:
Post a Comment