Friday, January 22, 2021

ரூ. 2 லட்சம் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு அழைப்பு

 ரூ. 2 லட்சம் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு அழைப்பு.


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை:

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சார்பாக வருடந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2020-21 ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் உயர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவர்களின் குடும்ப வருமானம் 2 லட்சத்திற்கு அதிகமானதாக இருக்கக்கூடாது.


இந்த ஆண்டு புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி தேதி பிப்ரவரி மாதம் 15 ஆகும்”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...