Tuesday, January 12, 2021

கரும்பொருள் வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பரிசு பெற்ற வில்லெம் வீன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 13, 1866).

கரும்பொருள் வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பரிசு பெற்ற வில்லெம் வீன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 13, 1866). 

வில்லெம் வீன் (Wilhelm Wien) ஜனவரி 13, 1864ல் பிரஷ்ஷயாவில் பிறந்தார். 1879ல் ராஷ்டன் பர்க்கில் உள்ள பள்ளியிலும் 1880-82ல் கெய்டல் பர்க் நகரில் உள்ள பள்ளியிலும் படித்துள்ளார். 1882ல் கோட்டிஞ்சென் பல்கலைக் கழகத்திலும் பின்னல் பெர்லின் பல்கலைக் கழகத்திலும் உயர் கல்வி பெற்றார். 1883-85ல் கார்மன் வான் கெல்மோல்ட்ஜ் என்ற அறிவியல் அறிஞரின் ஆய்வுக் கூடத்தில் பணியாற்றினார். 1883ல் வெப்பவியல், மின்காந்தவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வீன் இடப்பெயர்ச்சி விதியை (Wien's displacement law) உருவாக்கினார். உலோகங்களில் ஏற்படும் ஔியின் விளிம்பு விளைவு (Diffraction of light) ஔி விலகலின் போது‍ பல்வேறு‍ பொருட்களினால் வண்ணங்களில் ஏற்படும் தாக்கம் குறித்து‍ ஆய்வுகள் செய்து‍ 1886 ஆம் ஆண்டு‍ முனைவர் பட்டம் பெற்றார். 



mechanism of continuum spectrum

1896ல் வெப்ப இயக்கவியல் வெப்பக் கதிர்வீச்சிற்கான விதிகள் பற்றிய கோட்பாடுகளிலும் வெற்றிடத்தில் மின்னிறக்கம் (electric discharge) நடைபெறுவதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். கால்வாய்க் கதிர்கள் (canal rays), 1899ல் நீர்ம இயக்கவியல் (Hydrodynamics), 1900ல் மின்காந்த அடிப்படையில் எந்திரவியல் என்ற கோட்பாட்டு‍ ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். 1912 மற்றும் 1918 ஆகிய ஆண்டுகளில் நேர்மின் கதிர்களைப் பற்றி மேலும் பல ஆய்வுகளில் ஈடுபட்டார். நியூட்டனின் இயற்பியல் கோட்பாடு‍களிலிருந்து‍ துகற் கற்றை இயற்பியலுக்கு‍ (Mass spectroscopy) மாறும் வகையில் வீனின் ஆய்வுகளை மேற்கொண்டார். 


Добра фізика: Теплове випромінювання

வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியவர். ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அறிவியல் அறிஞர். அனைத்துவகைக் கதிர்களையும் உள்ளிழுக்கும் தன்மை வாய்ந்த கரும்பொருள் ஒன்றை வரையறைப் படுத்தியவர். வெப்பக்கதிர்வீச்சு குறித்த பங்கீட்டு விதிகளை உருவாக்கியவர். 1911 ஆம் வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பரிசு பெற்றவர். கரும்பொருள் வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பரிசு பெற்ற வில்லெம் வீன் ஆகஸ்ட் 30 1928ல் தனது 64வது அகவையில் முனிச், ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...