Tuesday, January 12, 2021

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.

Breaking || புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.! -  Seithipunal

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்திய நிறைவேற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடந்த 49 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வந்த வழக்குகளை ஒன்றாக விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே பல கட்டங்களாக நீடித்து வரும் பேச்சுவார்த்தை தொடர்ந்து பலனளிக்காத நிலையில், பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல நான்கு நபர்கள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

பி.எஸ். மன், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி மற்றும் அனில் தன்வந்த் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகள் என இருதரப்பினரிடமும் கலந்துரையாடி அதுகுறித்த அறிக்கையை இந்த குழுவினர் உச்ச நீதிமன்றத்திடம் அளிப்பர். அதை முதலாக கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...