Saturday, January 2, 2021

கோவிட்-19 கொரோனா பாதிப்பை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி தீர்வாக இருக்குமா?

கோவிட்-19 கொரோனா பாதிப்பை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி தீர்வாக இருக்குமா?

இந்தியாவின் ஒடிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் சிவப்பு எறும்பு சட்னியை தங்களது பாரம்பரியாக உணவாக சாப்பிட்டு வருகின்றனர். இந்த சட்னி சிவப்பு எறும்புகள், பச்சை மிளகாய் ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்படுகிறது. இது கொரோனாவிற்கு எதிராக செயல்படும் எனவும் பழங்குடியினரால் நம்பப்படுகிறது.

இதுதொடர்பாக CSIRக்கு ஜூன் 23ஆம் தேதியும், ஆயுஷ் அமைச்சகத்திற்கு ஜூலை 7ஆம் தேதி ஒடிசா மாநிலம் பரிபடாவைச் சேர்ந்த பொறியாளர் நயதார் பதியால் என்பவர் பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சிவப்பு எறும்பு சட்னியில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. குறிப்பாக ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.

இந்த சட்னியில் புரோட்டீன், கால்சியம், ஜிங்க் உள்ளிட்டவை இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக ஒடிசா உயர் நீதிமன்றத்திலும் மனு ஒன்றை நயதார் பதியால் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் சிவப்பு எறும்பு சட்னியில் இருக்கிறது. காலங்காலமாக இதனை சாப்பிட்டு வரும் பழங்குடியின மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

எனவே கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு சிவப்பு எறும்பு சட்னியை பயன்படுத்த பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர் சாரங்கி மற்றும் பிரமாத் பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நயதார் பதியால் தாக்கல் செய்த மனு எந்தவித கருத்தையும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. 

கொரோனாவை நீக்கும் வல்லமை படைத்ததா சிவப்பு எறும்பு சட்னி?.. ஆய்வுகள் கூறுவது  என்ன? | Red Ant Chutney is effective for Corona? - Tamil Oneindia

அதேசமயம் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் CSIR-ன் பொது இயக்குநருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறோம். சிவப்பு எறும்பு சட்னியில் உண்மையாகவே கொரோனாவை எதிர்க்கும் வல்லமை இருக்கிறதா? இதனை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான சிகிச்சையில் பயன்படுத்தலாமா? என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அடுத்த மூன்று மாதங்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

Red ant chutney' as cure for COVID-19? Ministry of AYUSH, CSIR directed to  take a call in three months

இதற்கிடையில் “சிவப்பு எறும்பு சட்னியை உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிடக் கூடாது; அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் கூறாமல் எதையும் உண்ணக் கூடாது, வாட்ஸ் அப் செய்திகளை நம்ப வேண்டாம்” - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...