Wednesday, January 20, 2021

4K குறைவான வெப்பநிலை சூப்பர் திரவ ஹீலியம் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்ற டேவிட் மொரிஸ் லீ பிறந்த தினம் இன்று (ஜனவரி 20, 1931).

4K குறைவான வெப்பநிலை சூப்பர் திரவ ஹீலியம் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்ற டேவிட் மொரிஸ் லீ பிறந்த தினம் இன்று (ஜனவரி 20, 1931). 

டேவிட் மொரிஸ் லீ (David Lee) ஜனவரி 20, 1931ல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை மார்வின் லீ மின்சாரப் பொறியியலாளரும், தாய் அனெட் பிராங்ஸ் ஆசிரியரும் ஆவார். இவர்கள் இங்கிலாந்து மற்றும் லித்துவேனியாவில் இருந்து குடியேறிய யூதர்கள். 1952 ஆம் ஆண்டு லீ ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்பு ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் இணைந்து 22 மாதங்கள் பணி புரிந்தார். இராணுவத்தில் இருந்து வெளியேறிய பின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1955ல் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற கற்கும் போதே ஹென்றி ஏ.பேர்டன்பாங் இன் கீழ் திரவ ஈலியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். 1959ல் முனைவர் பட்டம் பெற்றபின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வகத்தை அமைப்பதற்கான பணியில் அமர்த்தப்பட்டார். 



Top 10 Superfluid GIFs | Find the best GIF on Gfycat

கார்னெல் பல்கலைக்கழகத்தில் அவரது வருங்கால் மனைவி டானாவை சந்தித்தார். அச்சமயம் டானா வேறொரு துறையில் முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டு இருந்தார். இத்தம்பதியினருக்கு இரு புதல்வர்கள் உண்டு. 2009 நவம்பரில் லீ கார்னெலில் இருந்து டெக்ஸாஸ் ஏ என்ட் எம் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். 2016 ஆம் ஆண்டு அவரது மனைவி டானா உடல் நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். லீ, ராபர்ட் சி ரிச்சர்ட்சன் மற்றும் பட்டதாரி மாணவரான டக் ஒசிரோப் ஆகியோருடன் இணைந்து பொமரன்சு செல்லை பயன்படுத்தி குறைந்த வெப்பநிலையில் 3He இணை ஆராய்ந்தனர். இதன் விளைவாக 4K குறைவான வெப்பநிலை சூப்பர் ப்ளூயிட் ஹீலியத்தை கண்டறிந்தனர். இக் கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசை 1996 ஆம் ஆண்டு மூவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் லீ குறைந்த வெப்பநிலை இயற்பியல், திரவ, திண்ம, சூப்பர் ப்ளூயிட் ஹீலியம் (4He, 3He) மற்றும் அவற்றின் கலவைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 



Liquid Helium - Album on Imgur

1976 ஆம் ஆண்டு பிரித்தானிய இயற்பியல் நிறுவனத்தினால் சார் பிரன்சிஸ் சிம்மொன் ஞாபகார்த்த பரிசினை பெற்றுக் கொண்டார். 1981 ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் சங்கத்தினால் ஒலிவர் பக்லி பரிசு லீ, டக் ஒசிரோப், ரொபர்ட் ரிச்சரட்சன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. லீ தேசிய அறிவியல் அகாதமி மற்றும் அமெரிக்க சயன்ஸ் அன்ட் ஆர்ட்ஸ் அகாதமியின் உறுப்பினர் ஆவார். தற்சமயம் டெக்ஸாஸ் ஏ அன்ட் எம் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதோடு ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகின்றார். 1996 ஆம் ஆண்டு ராபர்ட் சி ரிச்சர்ட்சன் மற்றும் டக்ளஸ் ஒசிரொப் ஆகியோருடன் இணைந்து சூப்பர் திரவ ஈலியம் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...