Friday, January 29, 2021

முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி திறப்பு, 9 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை:

முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி திறப்பு, 9 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு தொடர்கிறது. ஆனாலும், பொதுமக்கள் வசதிக்காக கடைகள், மால்கள், தியேட்டர்கள், பொது போக்குவரத்து, பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் என அனைத்திற்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில், கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. இதேபோல், தமிழகத்தில் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


இந்தநிலையில் உருமாற்றமடைந்த கொரோனா நோய் தொற்றை தடுக்கவும், அதன் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி தலைமை செயலகத்தில் இருந்தபடி ஆலோசனை நடத்துகிறார்.


இதையடுத்து, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துகிறார். இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கூடுதல் தளர்வுகளாக என்னென்ன அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட உள்ளது.


அதன்படி, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது போன்று, பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 


மேலும், மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது  குறித்து முடிவு செய்யப்படும். 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையின்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் எடப்பாடி இன்று மாலை அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...