கோவை மாணவர்கள் உருவாக்கிய சக்தி சாட் செயற்கைக்கோள் பிப்ரவரி 22 ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
விண்வெளியில் நடைபெறும் அனைத்து விதமான, சம்பவங்களையும், இணையம் சார்ந்த செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில், மாணவர்கள் கண்டுபிடித்த செயற்கை கோள் விண்ணில் செலுத்த பிப்ரவரி 22 ம்தேதி தயாராக உள்ளதாக கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சக்தி கல்லூரியின் தலைவர் டாக்டர் தங்கவேலு, கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்....
கடந்த 2010 ஆண்டு முதலாக தங்களின் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் கனவாக, கல்லூரியின் சார்பில், புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்பது பற்றிய ஆராய்ச்சி, பலகட்ட முயற்ச்சியின் விளைவாக, கல்லூரி ஆசிரியர்களின் கடின உழைப்பால், வருகிற பிப்ரவரி 22 ம்தேதி கல்லூரியின் சார்பில் கண்டுபிடிக்கபட்ட புதிய வகையிலான, செயற்கைக்கோளான *"சக்தி சாட் PSLV / C - 51"* என்ற செயற்க்கை கோள் விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செயற்கைக்கோளை செலுத்துவதற்கான தரைதள நிலையத்தை வருகின்ற ஜனவரி 28 ம் தேதி சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் துவங்க உள்ளதாகவும், இதனை இணையதள வாயிலாக இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார், மேலும் இந்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் பிப்ரவரி 22 ம்தேதி விண்ணில் செலுத்த உள்ளதாகவும், அதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் உதவியுடன், ஹரிகோட்டா என்ற பகுதியில் இனையவழியில் இருந்து செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செயற்கை கோளானது, விண்வெளியில், நடக்கின்ற அனைத்து விதமான இணையம் சார்ந்த விஷயங்களின் செயல்பாடுகளை இங்கு தெரிவிக்கும் திறன் கொண்டது எனவும், இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் இணைய விஷயங்களை *இன்டர்நெட் ஆப் திங்ஸ்* என்ற முறையில் மாணவர்களின் மத்தியில் விண்வெளி பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், வெறும் 460 கிராம் எடை கொண்ட மிக சிறிய அளவு கொண்ட இந்த செயற்கைக்கோளானது, நானோ செயற்கைக்கோளை போல, 10 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளின் பணியை செய்யும் என தெரிவித்துள்ளார், மேலும் இதன் உருவாக்க செலவு 2.5 கோடி எனவும் இதனை கோவை ஸ்ரீ சக்தி கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், கண்டுபிடித்து, சாதனை புரிந்துள்ளனர் எனவும், இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளது எனவும், இது இந்திய நாட்டின் உள்ள பல்வேறு மாணவர்களின் புதிய, புதிய அறிவுசார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசக்தி சாட்' செயற்கைகோள் பிப்., 28 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இது, ஆறு மாதங்கள் விண்ணில்சுற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், மூன்று ஆண்டுகள் சற்று குறைந்த அளவிலான துாரத்தில் சுற்றும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயு கசிவு கண்டறிய பயன்படுத்தலாம். காட்டுத்தீ, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து, வங்கிகள் மற்றும் பிற பாதுகாப்பு பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment