✍🏻⛈⛈இயற்கை வாழ்வியல் முறை⛈⛈மழைக்கால உணவுகளும் சில மருத்துவ குறிப்புகளும்.
⛈⛈⛈⛈⛈⛈
மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ
⛈⛈⛈⛈⛈⛈
1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
⛈⛈⛈⛈⛈⛈
2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
⛈⛈⛈⛈⛈⛈
3. பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
⛈⛈⛈⛈⛈⛈
4. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
⛈⛈⛈⛈⛈⛈
5. மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.
⛈⛈⛈⛈⛈⛈
6. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
⛈⛈⛈⛈⛈⛈
7. நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
⛈⛈⛈⛈⛈⛈
7. கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.
⛈⛈⛈⛈⛈⛈
8. மழைக் காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.
⛈⛈⛈⛈⛈⛈
9. மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும் பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
⛈⛈⛈⛈⛈⛈
10. சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
⛈⛈⛈⛈⛈⛈
11. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.
⛈⛈⛈⛈⛈⛈
12. மழைக் காலங்களில் கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் கீரைகளை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
⛈⛈⛈⛈⛈⛈
13. மழைக் காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.
⛈⛈⛈⛈⛈⛈
14. அசைவ உணவாக மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம். ஆனால் அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால் மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.
⛈⛈⛈⛈⛈⛈
15. மழைக் காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.
⛈⛈⛈⛈⛈⛈
பழங்கள்
மழைக்காலத்தில் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில் பழங்களில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, பெர்ரிப் பழங்கள், சாத்துக்குடி போன்றவற்றை உட்கொள்வது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடும் முன் அவற்றை நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
⛈⛈⛈⛈⛈⛈
சீீரகம்
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். மேலும் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமலும் இருக்கும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமான மண்டலம் சீராக இயங்கவும், சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
⛈⛈⛈⛈⛈⛈
இஞ்சி டீ
தினமும் டீ குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அதில் சிறிது இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடித்தால் சளியினால் ஏற்படும் தொந்தரவு நீங்கும்.
⛈⛈⛈⛈⛈⛈
மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தரும். எனவே மஞ்சளை அனைத்து உணவிலும் சேர்ப்பதோடு, தினமும் இரவில் சூடான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.
⛈⛈⛈⛈⛈⛈
சளி அல்லது ஜலதோஷம் பீடிப்பதால் பலருக்கும் மூக்கடைப்பு பிரச்சனை உண்டாகிறது. சளி நுரையீரலில் பரவுவதால் சிலருக்கு மார்பு சளி ஏற்பட்டு மூச்சிரைப்பு, கடும் இருமல் போன்றவை உண்டாகிறது. இச்சமயங்களில் ஒரு வெற்றிலையில் மூன்று மிளகு வைத்து, வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
⛈⛈⛈⛈⛈⛈
கபம்
மழைகாலங்களில் உடலில் இருக்கும் மூன்று தன்மைகளான வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் கபம் சார்ந்த பாதிப்புகளான சுவாச சம்பந்தமான நோய்கள், இருமல், தொண்டைப்புண் போன்றவை அதிகம் ஏற்படுகிறது இக்காலங்களில் கண்டங்கத்திரி காய்கள் கொண்டு செய்யப்பட்ட குழம்பு, கூட்டு போன்றவற்றை சாப்பிடுவதால் கபம் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
⛈⛈⛈⛈⛈⛈
கொள்ளு ரசம்
கொள்ளு தானியத்தில் நோய் தொற்றை எதிர்த்து போராடும் சக்தி அதிகம் உள்ளது. மழைக்காலங்களில் கொள்ளு ரசம் தயாரித்து அவ்வப்போது பருகி வந்தால் ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்றவை முற்றிலும் நீங்கும். இக்கொள்ளு ரசத்தை குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்து வந்தால் மழைக்காலங்களில் நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கலாம்.
⛈⛈⛈⛈⛈⛈
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
🤭🤭🤭🤭🤭🤭
உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
💞💞💞💞💞💞
நன்றி: பெருசங்கர், 🚎 ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் ((6383487768))📞
வாட்ஸ்அப் எண் ((7598258480))
⛈⛈⛈⛈⛈⛈
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9750895059
No comments:
Post a Comment