Monday, January 11, 2021

இந்தியாவில் 200 ரூபாய்க்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' கரோனா தடுப்பூசி.

இந்தியாவில் 200 ரூபாய்க்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' கரோனா தடுப்பூசி.


வருகின்ற 16 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 

 

கரோனா தடுப்பூசி செலுத்துவதில், முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு தற்பொழுது கொள்முதல் செய்துள்ளது. அதேபோல் பாரத் பையோ டெக் நிறுவனத்தின் கோவாக்சீன் தடுப்பூசியும் கொள்முதல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக பிரதமர்  மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

 

இந்நிலையில் இந்தியாவில் 200 ரூபாய்க்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசி கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.






கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்ய, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, மத்திய அரசுடன் 40 கோடி தடுப்பூசிகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாகவும், முதல் 10 கோடி தடுப்பூசிகள் 200 ரூபாய் எனும் சிறப்பு விலையில வழங்கப்படும் என்றும் கூறினார்.

அதேசமயம், தனியார் சந்தைகளில் ஒரு தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கும் என்றார். சில மாதங்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும், அரசுடனான ஒப்பந்தம் இறுதி ஆனதும் 7 முதல் 10 நாட்களுக்குள் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் எனவும் பூனவல்லா கூறினார்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...