Saturday, January 2, 2021

இனி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; காஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்.

இனி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; காஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்.


இனி மிஸ்டு கால் கொடுத்தால் காஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் வசதியை இண்டேன் நிறுவனம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தியன் ஆயில்வாடிக்கையாளர்க்ள் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, காஸ் சிலிண்டரைப் பதிவு செய்யலாம். 


இதன் மூலம் சிலிண்டர் பதிவு செய்வதற்கான அழைப்புகளுக்காக வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிராமப் புறங்களில் வயதான மக்கள் ஐவிஆர்எஸ் அழைப்புகள் மூலம் சிரமப்படத் தேவையிருக்காது. இதற்கான திட்டத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஸ்வரில் இன்று தொடங்கி வைத்தார்.


அதேபோல புதிய காஸ் சிலிண்டர் பெற மிஸ்டு கால் கொடுக்கும் வசதியும் புவனேஸ்வரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...