Wednesday, January 20, 2021

✍🏻🍃🍃இயற்கை வாழ்வியல் முறை🍃🍃கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்.

✍🏻🍃🍃இயற்கை வாழ்வியல் முறை🍃🍃கறிவேப்பிலை மருத்துவ குணங்கள்.  

கறிவேப்பிலை மருத்துவ பயன் karuvepillai health benefits in tamil - YouTube

🍃🍃🍃🍃🍃🍃

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்.  இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம். ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். தூக்கி எரியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். 

🍃🍃🍃🍃🍃🍃

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. 

தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.

இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

 🍃🍃🍃🍃🍃🍃

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

 🍃🍃🍃🍃🍃🍃

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலையின் பயன்கள்

 🍃🍃🍃🍃🍃🍃 

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

 🍃🍃🍃🍃🍃🍃

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது. அரோசிகம் எடுபட எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

 🍃🍃🍃🍃🍃🍃 

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும். இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

 🍃🍃🍃🍃🍃🍃

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும். பைத்தியம் தெளிய புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை

🍃🍃🍃🍃🍃🍃

இதைச் சட்னியாக அரைத்துச் சாப்பிட்டால் முழு சத்தையும் பெற வாய்ப்புண்டு. இது உடலுக்கு சிறிது வெப்பத்தையும் அளிக்கவல்லது.  இது உடலுக்கு பலத்தை அளிப்பதுடன், எலும்புகளுக்கும் வலுவை அளிக்கிறது. நரம்புத் தளர்ச்சி இருந்தாலும் நீங்கிவிடும்.

 🍃🍃🍃🍃🍃🍃

மேலும் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை நீக்கவல்லது. பித்தக் காய்ச்சல், வாந்தி, கிறுகிறுப்பு, வயிற்றுவலி, வயிற்றில் இரைச்சல் போன்ற தொல்லைகளுக்கு பூரண நிவாரண அளிக்கும்.

🍃🍃🍃🍃🍃🍃

குடல், கல்லீரல், மண்ணீரல் மர்றும் சீரண மண்டல உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் சீரணமாக உதவும். மலச்சிக்கலையும் போக்கும்.

 🍃🍃🍃🍃🍃🍃

சீதபேதியை நிறுத்தும் ஆற்றலும் இதற்குண்டு. கண்பார்வையில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி பார்வையை தெளிவடையச் செய்யும். ஆண்மை குறைவைப் போக்கவல்லது. சாதாரண காய்ச்சலுக்கும் இதை சாப்பிட்டு குணம் பெறலாம்.

 🍃🍃🍃🍃🍃🍃

இந்த இலையை உடைத்து வடையாகத் தட்டி தேங்காய் எண்ணையுடன் சேர்த்து அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து தைலம் தயாரிக்கலாம். இதைத் தலையில் தேய்த்து வர பித்த மயக்கம் போகும். முடி நரைக்காது.

உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

benefits of curry leaves: கறிவேப்பிலை : உடம்புல இருக்கிற எல்லா நோயும்  தெறிச்சு ஓடுமாமே.. - amazing health benefits of curry leaves | Samayam Tamil

🍃🍃🍃🍃🍃🍃

காலைச் சோர்வு

கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.

குமட்டல் மற்றும் வாந்தி

மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

🍃🍃🍃🍃🍃🍃

சிறுநீரக பிரச்சனைகள்

கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

🍃🍃🍃🍃🍃🍃

பூச்சிக்கடி

பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும்.

Tamil Recipe: உடலுக்கு வலுவூட்டும் சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெசிபி! -  curry leaves gravy or karuveppilai kuzhambu recipe in tamil | Samayam Tamil

🍃🍃🍃🍃🍃🍃

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

(( செல் நம்பர்))  (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🍃🍃🍃🍃🍃🍃

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...