Tuesday, January 19, 2021

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி- டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி- டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது

பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது இந்தியா.

நான்காவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடை பெற்ற 4வது மற்றும் இறுதி டெஸ்ட்ல் இந்திய அணி வெற்றி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இறுதி ஓவர்களில் ரிஷப் பன்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக இந்தியா வெற்றிப்பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

காபா டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானார். ஆனால் இதனையடுத்து களமிறங்கிய புஜாரா ஆஸி பவுலர்களின் பந்துவீச்சை பொறுமையுடன் விளையாடினார். புஜாராவும், சுப்மன் கில்லும் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.
ஆனால் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்த சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே அதிரடி காட்டினாலும் 22 ரன்களில் அவுட்டானார். ஆனால் தொடர்ந்து ரிஷப் பன்ட் மற்றும் புஜாரா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 56 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 9 ரன்களில் மயங்க் அகர்வால் அவுட்டானதையடுத்து இந்தியாவின் சேஸிங் கனவு தகர்ந்தது. இதனையடுத்து ரிஷப் பன்ட் உடன் வாஷிங்டன் சுந்தர் இறுதிக் கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியாவின் வெற்றி நெருக்கத்தில் சென்றது. இந்த இருவருமே இந்தியாவின் வெற்றியை வசமாக்குவார்கள் என நினைத்த நிலையில் சுந்தர் 22 ரன்களில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று அவுட்டானார். ஆனால் இறுதிவரை நிலைத்து நின்றும் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவை வெற்றிப்பெற வைத்தார்.

ரிஷப் பன்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்து இந்தியா வெல்ல உதவினார். இதனையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று சாதனைப்படைத்தது.

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ள காபா மைதானம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கோட்டையாக இருக்கலாம். ஆனால் அங்கும் இந்திய அணியின் வெற்றிக்கொடி பறக்கும். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், காபா டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அவர் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என வென்று காட்டியுள்ளது இந்திய அணி. 

அனுபவ வீரர்கள் காயமடைந்த போதிலும் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி வளர்ந்து வரும் வீரர்களால் சாத்தியமாகி உள்ளது.

சிராஜ், வாஷிங்டன் சுந்தர், தாகூர், கில், பண்ட், விஹாரி என இளைஞர்கள் கொடுத்த பங்களிப்பினால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.

'முதல் இந்தியர்’ எனும் சாதனை படைத்த நெட் பவுலர் Net Bowler நடராஜன்: ஐசிசி பாராட்டு. இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியத் தொடருக்கு வந்து அனைத்துப் பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் டி.நடராஜன் என்று ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.


வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் மைதானத்தை மூவர்ணக் கொடியை தாங்கியபடி வலம் வரும் இந்திய அணி!



ஆஸ்திரேலிய தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ 5 கோடி போனஸ் அறிவித்திருக்கிறது.

கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.
அதில், ‘’ஆஸ்திரேலியாவின் இந்திய அணியின் வெற்றிகுறித்து நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அயராத உழைப்பும், பேரார்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது. வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. எதிர்காலத்திலும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’’ என்று வாழ்த்தியிருக்கிறார்.

இதற்கிடையே, இந்திய அணியின் சிறப்பான விளையாட்டை பாராட்டி, பிசிசிஐ போனஸாக ரூ. 5 கோடி இந்திய அணிக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கிறது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.








No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...