Tuesday, January 19, 2021

உலக புகழ் பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் பத்ம விபூசண் வி. சாந்தா மறைவு.

உலக புகழ் பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனை  தலைவர் மருத்துவர் பத்ம விபூசண் வி. சாந்தா மறைவு.

மறைந்த மருத்துவர் சாந்தா தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்த டாக்டர் வி சாந்தா மக்களால் என்றைக்கும் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.


சாந்தா 1927 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி சென்னையின் மைலாப்பூரில் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார், அதில் இரண்டு நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமன் (பெரிய மாமா) மற்றும் எஸ்.சந்திரசேகர் (மாமா).

தன்னமலற்ற சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது என ஏராளமான விருதுகளை பெற்றவர் சாந்தா. தான் விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே இவர் செலவு செய்தார். டாக்டர் வி. சாந்தாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட டாக்டர் வி. சாந்தா என்றும் நினைவு கூறப்படுவார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவையாற்றுகிறது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. அவரது மறைவு கவலை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி என்றும் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.





No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...