Friday, February 12, 2021

2098 முதுகலை ஆசிரியர் (PG TRB) பணியிடங்களை போட்டித் தேர்வு அறிவிப்பு!

2098 முதுகலை ஆசிரியர் (PG TRB) பணியிடங்களை போட்டித் தேர்வு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் 1ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 9மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் இயங்குகின்றன. உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது. அதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் வாரியம் உள்ளது.


ஆசிரியர் பணி:

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று பத்திரிக்கைகளில் அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முக்கிய விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் 25ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இணைதளம்:

ஜூன் 26 மற்றும் 27ம் தேதிகளில் போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வில் பங்கேற்க விருப்பம் கொள்பவர்கள் www.trb.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். அதனால் தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் மார்ச் 25-ஆம் தேதி மாலை 5ம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.

ஊதியம் எவ்வளவு பணியிடங்கள்: 

2098 (backlog vacancy :235) ஊதியம்: (லெவல் 18) 36800 ரூபாய் முதல் 116600 வரை விளம்பரம் செய்யப்பட்ட நாள்: பிப்ரவரி 11 எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்: மார்ச் 1 விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 25 (மாலை 5மணி) விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.trb.nic.in.

தேர்வு தேதி:  26-6-2021 & 27-06-2021

ஆன்லைன் பதிவு தொடக்கம் : 01-03-2021

ஆன்லைன் கடைசி தேதி: 25-03-2021

TRB Recruitment Notification 2021 Link

Website Link

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...