Friday, February 5, 2021

60 ஆகிறது தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது? விரைவில் அறிவிப்பு.

60 ஆகிறது தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது? விரைவில் அறிவிப்பு.


அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கான கோப்புகள் தற்போது முதல்வர் பழனிசாமியிடம் இருப்பதாகவும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பு, கரோனா காலத்தில், கடந்த ஆண்டு 59 ஆக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு இது 60 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source By: Dinamani.


தமிழக அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் சொந்த வீடு கட்ட அல்லது வாங்க, அரசு சார்பில் வழங்கப்படும் முன்பணம் ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

இதே போல் பல்வேறு கோரிக்கைகளை எதிர்த்து போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான் பல்வேறு வழக்குகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.


தெலுங்கானா மாநில முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் உள்ளார். இவர் தனது தேர்தல் அறிக்கையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்துவோம்” என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவரே தேர்தலில் வெற்றி பெற்று முதல்-மந்திரியாகவும் இருக்கிறார். அவர், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார். தெலுங்கானா கிராமப்புற அபிவிருத்த திட்ட விழா ஒன்றில் பேசும்போது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...