Friday, February 5, 2021

கல்லூரி மாணவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பு


நடப்பு கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகிற 8ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரும் 8ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் நிலையில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 8ம் தேதி முதல் திறக்கப்படும் கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.





இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...