Monday, February 22, 2021

✍🏻🪴🪴இயற்கை வாழ்வியல் முறை🪴🪴ஆடுதீண்டாப்பாளை பயன்கள்.

✍🏻🪴🪴இயற்கை வாழ்வியல் முறை🪴🪴ஆடுதீண்டாப்பாளை பயன்கள்.

🪴🪴🪴🪴🪴

ஆடு தீண்டாப்பாளை முழுத்தாவரமும் குமட்டலான மணமும் வெப்பத் தன்மையும் கொண்டது. ஆடு தீண்டாப்பாளை குடல் புண்களை ஆற்றவும் வயிற்றுப் புழுக்களைக் கொல்லவும் விஷத் தன்மையை முறிக்கவும் உடலைப் பலப்படுத்தவும் மாதவிலக்கைத் தூண்டவும் பயன்படுகின்றது.

🪴🪴🪴🪴🪴

ஆடு தீண்டாப்பாளை தரையோடு படர்ந்து வளரும் புதர்ச்செடி, மாற்றடுக்கில் அமைந்த, சாம்பல் படர்ந்த, முட்டை வடிவ இலைகள் கொண்டது. மலர்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமானவை. கனிகள் முதிர்ந்த நிலையில் உள்ளிருக்கும் விதைகள் வெடித்துச் சிதறும்.

🪴🪴🪴🪴🪴

ஆடு தீண்டாப்பாளை இந்தியா முழுவதும், முக்கியமாகச் சமவெளிகளில் வளர்கின்றது கருப்பு மண் உள்ள நிலங்கள், சற்றே உப்புச்சுவை கொண்ட கழி நிலங்களில் மிகவும் பரவலாக வளர்கின்றது பங்கம்பாளைவாத்துப்பூ ஆகிய பெயர்களும் ஆடு தீண்டாப்பாளை தாவரத்திற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

🪴🪴🪴🪴🪴

வயிற்றுப் புழுக்கள் குணமாக ஆடு தீண்டாப்பாளை இலைச்சூரணம் ¼ தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் குடிக்க வேண்டும் அல்லது ஆடு தீண்டாப்பாளை விதைச் சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெயில் கலந்து இரவில் சாப்பிட வேண்டும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் மோர் சாதம் சாப்பிட்டு பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

ஆடுதீண்டாப்பாளை – மருத்துவ பயன்கள் – இனிது

🪴🪴🪴🪴🪴

பசுமையான ஆடுதீண்டாப்பாளை இலைகளை நசுக்கிப் பிழிந்து எடுத்த சாறு 50 மி.லி.யுடன் தேங்காயெண்ணெய் 50 மி.லி. சேர்த்து, நீர்வற்றும் வரை சுண்டக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மேல்பூச்சாகத் தடவிவர தோல் நோய்கள்,  சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி தீரும்.

🪴🪴🪴🪴🪴

ஆடுதீண்டாப் பாளை இலைகள் கொஞ்சம் எடுத்து 1/4 லிட்டர் சுடு தண்ணீரில் 2மணி நேரம் ஊறப் போட்டு 2மணி நேரம் கழித்து வடி கட்டி 50 மில்லி அளவு தினந்தோறும் காலையில் மட்டும் குடித்து வந்தால் பூச்சிக் கடி – கருமை நிறப்டை – பன்றி தோல் போன்ற படை கிரந்திவிஷம் – கனைச் சூடு – குடலில் தொல்லைப் படுத்தும் புழுக்கல் – தலைமுடி உதிர்தல் – சிலந்தி கடி – வாதநோந்கள் குணமாகும்.

🪴🪴🪴🪴🪴

இதன் சமூலத்துடன் கருங்குருவை நெல்லும் சேர்த்து அவித்து – அவல் இடித்து தினமும் ஒரு வேலை 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் சொறி – சிரங்கு – குஷ்டம் – வண்டு கடி – பூரான்கடி – செய்யான் கடி அரணைக் கடி முதலிய விஷங்கள் குணமாகும். அது வரையில் நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது. அப்போது மிளகை பால் விட்டு அரைத்து தேய்த்து குளித்து வர வேண்டும். வாரம் ஒரு முறை விதையை சூரணம் செய்து 5 கிராம் அளவு விளக்கெண்ணெயில் கொடுக்க நன்றாக பேதியாகும் இதனால் வயிற்றுவலி தீரும். சூதகக் தடையை நீக்கி மாத விலக்கைத் தூண்டும்.

இன்றைய மருத்துவ சிந்தனை: ஆடு தீண்டாப்பாளை- Dinamani

🪴🪴🪴🪴🪴

வேர் சூரணம் 1 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனையை தீர்த்து சுகப் பிரசவத்தை உண்டாக்கும்.

🪴🪴🪴🪴🪴

இலையை காய வைத்து இடித்து சூரணமாக செய்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .

🪴🪴🪴🪴🪴

வேந்நீரில் ஊறவைத்த இலையின் ஊறல் குடிநீரை 15-30 மி.லி கொடுத்து வந்தால் கரும்படை, கரப்பான், மயிர் கொட்டிப் போதல், கிரந்தி, வாதநோய்கள் போன்றவை தீரும்.

🪴🪴🪴🪴🪴

உலர்ந்த இலையை ஊறல் குடிநீர் செய்து கொடுத்தால் நுண்புழுக்கள் செத்து மலத்துடன் வெளியாகும்.

🪴🪴🪴🪴🪴

வேரை அரைத்து 3 முதல் 5 கிராம் கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்.

🪴🪴🪴🪴🪴

ஆடு தீண்டாப்பாளைச் சமூலச் சாறு, நல்லெண்ணெய் இரண்டும் சமஅளவு சேர்த்து எரித்து தைல பாகத்தில் எடுத்து வடிகட்டி, கரும்படை, கரப்பான் இவற்றிற்குத் தடவலாம். பீனிசம் (sinuitis) தீரும்.

🪴🪴🪴🪴🪴

அரைத்த சமூலம் தேங்காய் அளவு எடுத்துக் கொண்டு, நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, 10-20மி.லி ஐந்தைந்து நாட்களாக 40 நாட்கள் கொடுத்து வர பெருநோய்த் தடிப்பு நீங்கும்.

பாம்பு கடியை குணப்படுத்தும் ஆடுதீண்டாப்பாளை - Health Shortly

🪴🪴🪴🪴🪴

ஆடு தீண்டாப்பாளை வேர்ப்பட்டையை அரைத்து 5 கிராம் அளவு உண்டு வந்தால் சகல வித விஷங்களும் இறங்கிவிடும்.

🪴🪴🪴🪴🪴

ஆடு தீண்டாப்பாளை வேர்ப்பொடியை மூவிரல் அளவு உட்கொண்டால் வண்டுக் கடி தீரும்.

🪴🪴🪴🪴🪴

கட்டுரை முனைவர் மரு.பெ.பாரதஜோதி, இணைப்பேராசிரியர், சித்த மருத்துவத்துறை.

🪴🪴🪴🪴🪴

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🪴🪴🪴🪴🪴

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚   

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.

🪴🪴🪴🪴🪴

(( செல் நம்பர்)) 7598258480

((வாட்ஸ் அப்))  7598258480

🪴🪴🪴🪴🪴

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...