Tuesday, February 23, 2021

செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் விண்கலம் - பதிவு செய்யப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு.

செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் விண்கலம் - பதிவு செய்யப்பட்ட முதல் ஆடியோ வெளியீடு.

செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் பெர்சர்வன்ஸ் ரோவர் கடந்த வாரம் இறங்கிய நிலையில் அதன் காட்சிகளை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

பறந்து கொண்டிருக்கும் விண்கலத்திலிருந்து பாராசூட் மூலமாக பெர்சர்வன்ஸ் என பெயரிடப்பட்ட ரோவர் விடுபட்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு மணற் பாங்கான இடத்தில் சரியான பகுதியை தேர்வு செய்து இறங்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. விண்கலத்தின் 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 5 அதிநவீன கேமராக்கள் மூலம் இக்காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ரோவர் துல்லியமாக தரையிறங்கிய காட்சியை பூமியின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கண்காணித்து வந்த விஞ்ஞானிகள் உற்சாகமாக துள்ளிக்குதிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா 7 மாதங்களுக்கு முன் அனுப்பிய விண்கலம் மணிக்கு 19 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கடந்த வாரம் இலக்கை சென்றடைந்தது. இவ்விண்கலம் சுமார் 47 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்தது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் தரைப்பகுதியில் பாறை படிமங்களில் உள்ள பொருட்களை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்து அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...