Monday, February 8, 2021

விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு.

விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார். விவசாயிகள் நகைக்கடன் வாங்கி இருந்தாலும் அவை தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூபாய் 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதி, அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான சான்றிதழை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...