தமிழகத்தில் விவசாய பயிர் கடன் அதிரடி தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி என அதிரடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. அடுத்தடுத்த புயல்கள் உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை திமுக உள்பட அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்கள் தள்ளுபடி என அறிவித்துள்ளார். இதனை அடுத்து விவசாயிகள் சார்பில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்; வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், பயிர்க்கடன் நிலுவை வைத்துள்ள 16.43 லட்சம் வேளாண் பெருமக்களும் எந்தவிதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment