மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் (TAB) வழங்க நடவடிக்கை-அமைச்சர் செங்கோட்டையன்.
கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதும் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு சத்துணவு, பாடப் புத்தகங்கள், சீருடைகள், மிதி வண்டிகள் உள்ள்ளிட்டவை வழக்கம்போல் வழங்கப்பட்டன.
இந்நிலையில் மற்றொரு புதிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “6,7,8ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இலவசமாக ‘டேப்’ (TAB) வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
ஏற்கெனவே மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச டேப் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
6,7,8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர், “தற்போது 98.5 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தருகின்றனர். இப்போதைய சூழலில் 6,7,8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை” என்று கூறினார்.
No comments:
Post a Comment