Sunday, March 21, 2021

பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறையா?

பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறையா?உயர்கல்வித்துறையிடம் அறிக்கை கேட்கிறது அரசு..

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரிகளின் நேரடி வகுப்பிற்கு விடுமுறை அளிப்பது குறித்து உயர்கல்வித்துறையிடம் அரசு அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர்  இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்லூரிகள் டிசம்பர் 7 ந் தேதி முதல் துவக்கப்பட்டன.  அதனைத் தொடர்ந்து கல்லூரிகளில் கொரோனா பரவல் இல்லாமல் இருந்ததாலும்,  வைரஸ் தொற்று குறைந்து வந்ததால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலாம் ஆண்டு மற்றும் 2 ம் ஆண்டு  மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு ஜனவரி 21 ந் தேதி துவக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கல்லூரிகளும், விடுதிகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தமிழக்தில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ஜனவரி 19 ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட வேண்டும் என கூறினாலும், முழுவதும் பின்பற்றப்படுவதில்லை.

சென்னையில் ஐஐடி, அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா தாெற்று பாதிப்பு கண்டறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டன. பின்னர் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வந்தது.

தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் 1000க்கு குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் கடந்த 19 ந் தேதி முதல் 1000க்கு மேல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தைத் தொடர்ந்து  வரும் 22 ந் தேதி முதல் 9,10,11 ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மறு உத்தரவு வரும் வரையில்  நடத்துவதற்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த 19,20 ஆகிய தேதிகளில் ஆயிரத்தை  தாண்டி பதிவாகி வருகிறது. மேலும் பாதிப்பை குறைப்பதற்காக பரிசாேதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை தாெடர்ந்து கல்லூரியிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கண்டறிப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருப்பூர், சேலம்,  திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளிகளை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும்  கொரானா வைரஸ் தொற்று பரவலும் கண்டறியப்பட்டுள்ளது.  இதனால்  பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து உயர்கல்வித்துறையிடம் அரசு அறிக்கை கேட்டுள்ளது.
கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதை கருத்தில் கொண்டும், உயர்கல்வித்துறைக்கும் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட  வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி. 



No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...