Sunday, March 21, 2021

✍🏻 🖊️🖊️இயற்கை வாழ்வியல் முறை🖊️🖊️பெண்கள் நலமே குடும்பத்தின் பலம்.

✍🏻 🖊️🖊️இயற்கை வாழ்வியல் முறை🖊️🖊️பெண்கள் நலமே குடும்பத்தின் பலம்.

🖊️🖊️🖊️🖊️🖊️ பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் வளர்ப்பு முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தங்களி, நல்லெண்ணெய் சேர்த்துக் கொடுப்பார்கள். கார் அரிசிப் புட்டும், நல்லெண்ணெயில் உளுந்தவடை செய்து கொடுப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. நலுங்கு வைப்பதும் அந்தக் காலத்தில் வழக்கில் இருந்தது. வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு போன்றவை சேர்ந்த நலுங்கு மாவைப் பூசி மேலே சொன்ன உணவுகளை உண்ணக் கொடுப்பதன் மூலம் பெண்கள் நல்ல உடல் வளம் பெறுவார்கள். இது தமிழர் கலாசாரத்தில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. 

🖊️🖊️🖊️🖊️🖊️

சிறப்பு உணவுகளாக கற்றாழை லேகியம் கொடுப்பார்கள். கற்றாழையைப் பூப்பெய்திய பெண்களுக்குக் கொடுப்பதால் அது மாதவிடாய் பூப்பு அழற்சியை ஒழுங்குபடுத்தும். இது மெட்டபாலிசத்தைச் சரிசெய்யும். சர்க்கரைநோய்மூலம், கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

இன்றைக்கு வளரிளம் பெண்களுக்கு சிவப்பணுக்கள் குறைவாக உள்ளன. மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, 15 நாள்கள் இடைவெளியில் மாதவிடாய் ஆவது, நீண்டநாள் மாதவிடாய் வராமல் இருப்பது போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன. இதுபோன்ற குறைபாடுகள் வராமலிருக்க எள், உளுந்து போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிடுவது, கீரைகளை அதிகம் சாப்பிடுவது, மாதுளம்பழத்தை சாப்பிடவேண்டியது அவசியம். இவை மாதவிடாய் சுழற்சி உண்டாக பெரிதும் உதவும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

பெண்களுக்கு ஏற்படும் உடல்சூட்டால் வெள்ளைப்படுதல் ஏற்படும். இந்த வெள்ளைப்படுதலாலும் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். பெண்களின் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று காரணமாக விந்தணுக்கள் உயிரிழக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற சூழலில் சாதாரண படிகாரத்தைப் பொடியாக்கி, தண்ணீரில் கரைத்துக் கழுவினால், கிருமிகள் அழிக்கப்பட்டுவிடும். 

🖊️🖊️🖊️🖊️🖊️

இப்போதெல்லாம் தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட நாப்கின்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு பிறப்புறுப்பில் நோய்க்கிருமிகள் உண்டாகி பாதிப்பு ஏற்படுகிறது. நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடைகளைப் பெண்கள் அணிய வேண்டும் என்று நம் பாரம்பர்ய தமிழர் கலாசாரத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. தாவணி, புடவை உடுத்துவது இடுப்புப் பகுதியில் உள்ள வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

கர்ப்பப்பையின் தசைகள் லகுவாக சம்மணம் போட்டு தரையில் அமர்வது, பாண்டி ஆட்டம் ஆடுவது போன்ற விளையாட்டுகள் உதவும். எண்ணெய்க் குளியல், காய்கறிகள், பழங்கள், மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களை அதிகம் அருந்த வேண்டும். சிலர் `சீஸ்' சாப்பிடுகிறார்கள். அது நம் பெண்களுக்கு ஆகாது. அதற்குப் பதில் நெய் சாப்பிடலாம்

🖊️🖊️🖊️🖊️🖊️ 

புதினா இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சீராகும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

மாதவிலக்கு வருவதற்கு ஒருவாரத்துக்கு முன்பிருந்தே தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டால் மாதவிலக்கு தள்ளிப் போகும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் பச்சை வாழைக்காயைத் தோல்நீக்கி சிறுசிறு துண்டுகளாகக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு நின்று போகும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

செம்பருத்திப் பூ மொட்டுகளின் சாறு எடுத்து தினமும் காலை மாலை இருவேளையும் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்

🖊️🖊️🖊️🖊️🖊️ 

வெந்தயத்தை ஊற வைத்து, அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு, வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிட வேண்டும். சிலர் வெந்தயக் கசப்புக்கு பயந்துகொண்டு , அதை அரைகுறையாக மென்று விழுங்கி விடுவார்கள் . இப்படிச்  செய்தால் பலன் கிடைக்காது.

🖊️🖊️🖊️🖊️🖊️

தண்டுக்கீரையின் தண்டுகளை மட்டும் சூப் வைத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் படிப்படியாக குணமாவதோடு , இனப்பெருக்க உறுப்புகளும் பலமடையும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு வெள்ளைப்பூசணிச் சாறுதான். வெயில் காலங்களில் மதிய வேளையில் தினமும் ஒரு கப்  வெள்ளைப்பூசணிச்சாறை குடித்து வாருங்கள்

🖊️🖊️🖊️🖊️🖊️

வெண்டைக்காயில் ஒரு கீறல் போட்டுக் கொள்ளவும். வெள்ளைப்பூசணித் துருவல்,  பச்சை வேர்க்கடலை, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றும் பாதியுமாக அரைக்கவும். இதை வெண்டைக்காயில் ஸ்டஃப்ஃபிங்காக வைத்து , பத்து நிமிடங்கள் இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்துச்  சாப்பிட்டு வாருங்கள். இதுவும் வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும். 

🖊️🖊️🖊️🖊️🖊️

சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை  நீரில் நன்கு அலசி மோருடன் அரைத்துக் குடித்தால், உடம்பின் சூடு தணிந்து, வெள்ளைப்படுதல் ஒரே நாளில் கட்டுக்குள் வரும். கூடவே, சோற்றுக்கற்றாழை ஜெல்லை நீருடன் சேர்த்து அரைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டுவந்தால் உடற்சூடு கட்டுக்குள் வரும்.

சோற்றுக் கற்றாழை (aloevera) – S.கீரந்தை s.keeranthai

🖊️🖊️🖊️🖊️🖊️

வேப்ப மரப்பட்டை மற்றும் சீரகத்தை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். வெள்ளைப்படுதல் பிரச்னை  வரும்போதெல்லாம், இந்தப் பொடியில் தேவையான அளவு எடுத்து குளிர்ந்த நீரில் குழைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டு கால் மணி நேரம் கழித்து தண்ணீரால் அலசி விடுங்கள் . அந்த இடத்தில் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்

🖊️🖊️🖊️🖊️🖊️

நாகப்பழத்துக்கு வெள்ளைப்படுதலை சரி செய்கிற குணம் உண்டு . பழத்தைச்  சாப்பிட்டுவிட்டு அரிசி ஊற வைத்தத் தண்ணீரில் இதன் விதைகளைப் போட்டு அடுப்பில் நன்கு கொதிக்கவிடவும். பிறகு, ஆற வைத்த நீரால் அந்தரங்க பகுதியை சுத்தம் செய்துவிடவும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

மாங்கொட்டை மற்றும் மாம்பட்டை இரண்டையும் பேஸ்ட்  போல அரைத்து,  அந்தரங்க பகுதியில் பேக் போடவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரால் அலசி வந்தால் அங்கிருக்கும் கிருமிகள் அழிந்து வெள்ளைப்படுதல் குணமாகும்.

🖊️🖊️🖊️🖊️🖊️

சூரிய ஒளிக்குத்  துணிகளில் இருக்கிற கிருமிகளை அழிக்கிற தன்மை உண்டு . ஆனால் உள்ளாடைகளை வெயிலில் போடுவதை அவமானமாக நினைக்கிறார்கள் இன்றைய பெண்கள். அதை ரகசியம்போல் காக்கிறார்கள். அதற்கெல்லாம் அவசியமேயில்லை. அப்படி செய்துவந்தால் நம் உடல்தான் கெடும். உள்ளாடைகளை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்தாலே அதில் இருக்கும் கிருமிகள் இறந்து வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் வராது.

🖊️🖊️🖊️🖊️🖊️ 

கீழாநெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து ஏழு நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பிரச்னையைச் சரிசெய்யும்

🖊️🖊️🖊️🖊️🖊️ மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🖊️🖊️🖊️🖊️🖊️

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚

 உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர்,🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.             

🖊️🖊️🖊️🖊️🖊️

செல் நம்பர்  7598258480,  6383487768

((வாட்ஸ் அப்))  7598258480

🖊️🖊️🖊️🖊️🖊️

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH : 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.  

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...