✍🏻🥣🥣 இயற்கை வாழ்வியல் முறை🥣🥣கரிசலாங்கண்ணி கீரையின் நன்மைகள்.
🥣🥣🥣🥣🥣
வள்ளலார் அருளிய தீராத நோய் தீர்க்கும்
ஞான மூலிகை கரிசலாங்கண்ணி கீரை!!
🥣🥣🥣🥣🥣
வடலூர் மகான் வள்ளலார் சுவாமிகள் கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கரிசாலையை உண்டு மக்கள் தங்களின் ஞான நிலையை அடைய வள்ளல்பெருமான் இதனை கற்ப மூலிகை என்றும் கூறியுள்ளார்
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணிக்கு கரிசாலை, கைகேசி, கையாந்தகரை கரிப்பான்,தேகராஜம், பிருங்கராஜம், பொற்றிலைப்பாவை என பல பெயர்கள் உண்டு. இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இருவகை உண்டு. வெள்ளை கரிசலாங்கண்ணி இரும்புச்சத்து அதிகம் கொண்டவை. மஞ்சள் கரிசலாங் கண்ணி தாமிரச் சத்து அதிகம் கொண்டவை. தமிழ் மருத்துவத்தில் வெள்ளை கரிசலாங் கண்ணியே அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்துள்ளது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில், அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது. ஆண்டுதோறும் அரசுக்கு “கண்ணிக்காணம்” என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
🥣🥣🥣🥣🥣
“கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்” என்ற பழமொழிக்கேற்ப பல சித்தர்கள் கரிசாலையை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள்.
🥣🥣🥣🥣🥣
“பொற்றலை கையாந்தக்கரை பொன்னிறமாக்கும் உடலை...” எனும் அகத்தியர் பாடலின் மூலம், (கண்ணிற்கு ஒளியையும் , உடலை பொன் போன்று மின்னவும் செய்யும்) மஞ்சள் கரிசாலையின் மேன்மையை கூறியுள்ளார்.
🥣🥣🥣🥣🥣
அகத்தியருடைய தலைமை சீடராக விளங்கிய தேரையர் சித்தர் எழுதிய தேரன் வெண்பாவில் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:
வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:
🥣🥣🥣🥣🥣
குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை
யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்
கையாந்தகர யொத்தக்கால்”
🥣🥣🥣🥣🥣
இதனால் குரலுறுப்பு நோய், காமாலை, குட்டம், சோகை, வீக்கம், பாண்டு, பல் நோய் ஆகியவை போகும். உடலில் போற்சாயலும், யாளிக்குள்ள பலமும் உண்டாகும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:
திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை
யுருவுண்டா முள்ளதெல்"லா முண்டாங் குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத்
தன்னாகத் தின்றாகத் தான்.
🥣🥣🥣🥣🥣
இதனை சமைத்து உண்டு வந்தால் இறைவன் அருளும், அறிவின் தெளிவும், உடலுக்கு பொன் போன்ற நிறத்தையும் கொடுக்கும். குன்மக்கட்டியை நீக்கும்.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி, வயலோரங்களிலும் நீர்ப்பாங்கான இடங்களிலும், சாலை ஓரங்களிலும் படர்ந்தும் சற்று நிமிர்ந்தும் வளரக்கூடிய சிறுசெடி. இலைகள், எதிரெதிராக அமைந்தவை. அகலத்தில் குறுகியவை, நீண்டவை, இலைகளின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும். மலர்கள், சிறியவையாக இருக்கும்.
வெள்ளை, மஞ்சள் நிற மலர்கள், இனத்தைப் பிரித்துக் காட்டும்.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி கீரையின் அற்புதங்கள்:கரிசலாங்கண்ணி செடி முழுவதுமே மருத்துவக் குணம் மிகுந்தவையாக இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கீரை மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் கற்ப மூலிகை. உடலை நோய் அணுகாதபடி காத்து என்றும் இளமையுடனும், புத்துணர்வுடனும் திளைக்கச் செய்யும்
🥣🥣🥣🥣🥣
இதனை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இதனை உணவில் சேர்த்துக் கொண்டாலும், இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல், நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
🥣🥣🥣🥣🥣
இந்த கீரையில் தங்கச்சத்தும், இரும்புச்சத்தும், அபரிமிதமாக இருக்கின்றன. தவிர மணிச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் A மற்றும்C சத்துக்களும், தாது உப்புக்களும், மாவுச்சத்தும், புரதம் போன்றவைகளும் இருக்கின்றன.
🥣🥣🥣🥣🥣
100 கிராம் கரிசலாங்கண்ணி கீரையில் உள்ள சத்துகள். நீர் -85%, மாவுப்பொருள் - 9.2%, புரதம் - 4.4%, கொழுப்பு - 0.8%, கால்சியம் - 62 யூனிட், இரும்புத் தாது - 8.9 யூனிட், பாஸ்பரஸ் - 4.62%.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்:
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி இலை மஞ்சள் காமாலை நோய்க்கு கண்கண்ட மருந்து.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி கீரை பசியை அதிகரிக்க செய்கிறது.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி கீரை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி கீரை அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், இரத்தசோகை, மலச்சிக்கல், பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும் மற்றும் உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும்.
🥣🥣🥣🥣🥣
அதிக காய்ச்சல் உள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி இலை சாற்றைக் கொடுத்தால் காய்ச்சல் குணமாகும். தவிர பித்தக்கோளாறுகள், தலைவலி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நற்பலன் தரும்.
🥣🥣🥣🥣🥣
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க சளி, இருமல் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய், வயிறு பொறுமல் உள்ளிட்ட நோய்களுக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்தால் விரைவில் குணமாகும்.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி புற்றுநோய் செல்களுக்கு எதிரியாகச் செயல்படும் நுண்கூறுகளைக் கொண்டிருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி தண்டு தேள்கடிக்கு, வீக்கம், வாந்தி இவைகளுக்கு ஒரு நல்ல மருந்து.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தூக்கமின்மை நீங்கும், கண்பார்வை அதிகரிக்கும், முடி உதிர்தல் நிற்கும், இளநரை மறைந்து முடி கருமையாக வளரும்.
🥣🥣🥣🥣🥣
கரிசலாங்கண்ணி ஒரு சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால்... புண்கள், வெட்டுக் காயங்களுக்கு மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.
🥣🥣🥣🥣🥣
விதை மூலமாக அல்லாமல் தண்டினை வெட்டி வைப்பதன் மூலமே உற்பத்தி செய்யப்படும் இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு வாசலிலோ அல்லது கொல்லைப் புறத்திலோ மொட்டை மாடி தோட்டத்திலோ வீட்டிற்கு தேவையானதை நட்டு வைத்து, உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்🥣🥣🥣🥣🥣
கட்டுரை: மீனாசேகர்.
🥣🥣🥣🥣🥣
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🥣🥣🥣🥣🥣
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
🥣🥣🥣🥣🥣
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
🥣🥣🥣🥣🥣
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9750895059.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment