Friday, April 2, 2021

ராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். (ஏப்ரல் 2,1984)

ராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். (ஏப்ரல் 2,1984).

ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma)  ஜனவரி 13, 1949ல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தார்.பாட்டியாலாவில் பிறந்த ராகேஷ் சர்மா தன்னுடைய பதினேழு வயதில் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். இந்திய விமானப்படையில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றினார். குறிப்பாக 1971ல் இந்திய பாகிஸ்தான் போரில் மிக் ரக விமானங்களை மிகத்திறமையாக போர்களத்தில் இயக்கினார். அவரது பணியின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்த பல விண்வெளிப் பயணத் திட்டங்களில் அவர் பங்குகொள்ள நேர்ந்தது. 


ஒரு விண்வெளி வீரராகும் அவரது பயணம் 1982ம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக ராகேஷ் ஏப்ரல் 2, 1984 அன்று சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். அன்றுதான் அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் அவர் எட்டு நாள்கள் தங்கியிருந்தார். விண்வெளியில் இருந்தபோது அவர் அங்கிருந்தவாறே இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் தொலைபேசியில் பேசினார். விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எவ்வாறு தெரிகிறது என்று இந்திரா காந்தி அவரிடம் கேட்டார். ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன், ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளைப் பெற்றார்.

Source By: Wikipedia

தகவல்: முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...