கணிதமாறிலி pi விஞ்சிய எண் என்று கண்டறிந்த ஜெர்மானிய கணிதவியலாளர் கார்ல் லூயி ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 12, 1852).
கார்ல் லூயி ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் (Karl Louis Ferdinand Lindemann) ஏப்ரல் 12, 1852ல் ஹனோவர், ஜெர்மனியில் பிறந்தார். மியூனிக், கெட்டிங்கென், ஆகிய இடங்களில் படித்து, எர்லாங்கெனில் ஃபெலிக்ஸ் க்ளைனின் மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றார். லியொவில்தான் முதன் முதலில் 1844ல் விஞ்சிய எண்கள் என்ற எண்களை உண்டாக்கிக் காட்டினார். ஆனால் அவர் காட்டிய எண்கள் அதற்காகவே சிரமப்பட்டு உண்டாக்கிய எண்கள். ஏற்கனவே நமக்குத் தெரிந்த எந்த எண்களையும் விஞ்சிய எண் என்று அவர் காட்டவில்லை. இதனில் ஒரு கணிதத் தத்துவமே அடங்கியிருக்கிறது. நாம் எண்களை உண்டு பண்ணும்போது படைத்தல் தொழிலைச் செய்தல் போன்று யாவும் நம் ஆதிக்கத்தில் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சர்ச்சையில் உள்ள கணிதமாறிலிகளான e, pi போன்ற முக்கியமான எண்களை நாம் விஞ்சிய எண்களா இல்லையா என்று பார்க்கும்போது, அவைகளின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம். இதனால் தான் ஹெர்மைட் 1873ல் e ஒரு விஞ்சிய எண்தான் என்று நிறுவியபோது கணித உலகம் அதை ஒரு பெரிய சாதனையாக வரவேற்றது. அவரே pi யும் அதேமாதிரி தீர்மானித்துவிடுவார் என்று உலகம் எதிர்பார்த்தது. ஒன்பது ஆண்டுகள் சென்றபின் லிண்டெமன் இச்சாதனையைப்புரிந்தார்.
Pi ஒரு இயற்கணித எண் அல்ல என்ற உண்மை இரண்டாயிரம் ஆண்டுகளாக கணித
இயலர்கள் மட்டுமன்றி மற்ற யாவரையுமே பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு ஆட்டிவைத்த
பழைய பிரச்சினை ஒன்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதுதான் வடிவவியலில்
அளவுகோல், கவராயம் (ruler &
compass) இவைகளை மட்டும் கொண்டு ஒரு வட்டத்தின்
பரப்பிற்குச் சமமான சதுரத்தை வரைவது என்ற சவால். இப்பிரச்சினைக்கு Squaring the circle என்று பெயர். இது எக்காலும் முடியாது என்பது லிண்டெமன் pi ஒரு விஞ்சிய எண்
என்று நிறுவியதன் விளைவு. ஏனென்றால் pi ஒரு இயற்கணித எண்ணாக இருந்தால் தான்
இது முடியும் என்று அவர் காலத்திற்கு முன்னமேயே தெரிந்த கணித உண்மை.
இது எக்காலும் முடியாது என்றார், pi ஒரு விஞ்சிய எண் என்று நிறுவியதன் விளைவு ஆகும். ஏனென்றால் pi ஒரு இயற்கணித எண்ணாக இருந்தால் தான் இது முடியும் என்று அவர் காலத்திற்கு முன்னமேயே தெரிந்த கணித உண்மை. லிண்டெமன்-விய்ர்ஸ்ட்ராஸ் தேற்றம் ஒரு எண்கோட்பாட்டுத் தேற்றம். லிண்டெமன் தேற்றத்தைவிட பலமானது. சில அடுக்குப் பல்லுறுப்புக்கோவைகளுக்கு (Exponential Polynomials) சூனியப்புள்ளிகள் (Zeros) இருக்கமுடியாது என்பதைச் சொல்கிற தேற்றம் ஆகும். இதனுடைய கிளைத் தேற்றங்களாக, e, pi இவையிரண்டுமே விஞ்சிய எண்கள் என்று நிறுவிவிடமுடியும். இத்தேற்றம் லிண்டெமன், வியர்ஸ்ட்ராஸ் இருவருடைய பெயர்களையும் கொண்டிருக்கிறது.
டேவிட்
ஹில்பர்ட், ஹெர்மன் மின்கொவ்ஸ்கி முதலிய சிறந்த அறிவியலர்கள் அவர் கீழ் ஆய்வுகள்
செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள். ஆசிரிய-மாணவ பரம்பரையில் ஃபெலிக்ஸ்
க்ளைன்-லிண்டெமன்-ஹில்பர்ட் பரம்பரை குறிப்பிடத்தக்கது. கணிதமாறிலி pi விஞ்சிய எண் என்று கண்டறிந்த கார்ல் லூயி ஃபெர்டினாண்ட் ஃபான்
லிண்டெமன் மார்ச் 06,
1939ல், தனது 86வது அகவையில் முனிச், ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment