Thursday, May 13, 2021

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

2020ல் நடந்த துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியான நிலையில் ஜூன் 8ஆம் தேதி மீதமுள்ள 14 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுகள் அவ்வபோது ஒத்திவைக்கப்பட்டது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோய் காரணமாக, தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட இருந்த தேர்வுகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.  இத்தேர்வுகள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் தற்போது 2020 டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளில் ஏற்கெனவே 129 தேர்வுகளின் முடிவுகள் 8ஆம் தேதி வெளியான நிலையில் மீதமுள்ள 14 தேர்வுகளின்முடிவுகள் வருகிற ஜூன் 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி. 

No comments:

Post a Comment

13 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

  13  லட்சம்  பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம்  குறித்த  மாணவ ,   மாணவிகள்   மற்றும்   ஆசிரியர்கள்  கருத்துக்கள் (Feedba...