Monday, May 17, 2021

எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த வங்காள கணித இயல் அறிஞர் இராதானாத் சிக்தார் நினைவு நாள் இன்று (மே 17, 1870).

எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த வங்காள கணித இயல் அறிஞர் இராதானாத் சிக்தார் நினைவு நாள் இன்று (மே 17, 1870). 

இராதானாத் சிக்தார் (Radhanath Sikdar) அக்டோபர் 1813ல் பிறந்தார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வங்காள கணித இயல் அறிஞர். கொல்கத்தாவில் உள்ள இன்று பிரெசிடென்சிக் கல்லூரி என்று அழைக்கப்படும் பழைய இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். வங்காளத்துப் பெண்கள் கல்வியில் சிறப்பதற்காகவும், நல்லுரிமைப் பெற்று விளங்குவதற்காகவும் மாசிக் பத்திரிக்கா என்னும் இதழைத் தொடங்கினார். 1840ம் ஆண்டு மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தில் சேர்ந்தார். 1852 ஆம் ஆண்டு எவரெஸ்ட்டின் (கொடுமுடி-15) உயரத்தை முதன்முதலாக சுமார் 8,848 மீட்டர் என்று கணித்தார். இதற்குப் பிறகே எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிகப்பெரியதென உலகத்தின் பிற ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 How to measure a mountain - Times of India

1831 ஆம் ஆண்டு ஜார்ஜ் எவரெஸ்ட் கோள முக்கோண முறையில் (Spherical Trigonometry) குறிப்பிட்டத் திறமையுள்ள ஒரு நல்ல இளம் கணிதவியலாளரைத் தேடும்போது, இந்து மதக் கல்லூரியின் அப்போதைய கணித ஆசிரியர் திரு. டைலர் டைட்லர் அவர்களின் மாணவர் ராதாநாத் சிக்தரை கண்டறிந்தார். அப்போது ராதாநாத்தின் வயது 19. அதன் பின்பு ராதாநாத் சிக்தார் 1831-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாபெரும் முக்கோணக் கணக்கீட்டுக் குழுமத்தில் (Great Trigonometry Survey) இணைந்தார். அப்போது இவரது மாத ஊதியம் இந்திய ரூபாய் 30. இவரது புவி அளவியல் திறமையை அறிந்த குழுவினர் டேராடூன் அருகே உள்ள சிரோஜிக்கு இவரை அனுப்பினர். இவரது அணுகுமுறையானது வழக்கமான புவிப்பார்த்தச் செயல்முறைககளிலிருந்து (மாஸ்டரிங் முறை) மாறுபட்டு, சொந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் உள்ளிடக்கிய புது வகையான அணுகுமுறையாக இருந்தது. 

சிறப்பான செயல்பாட்டின் காரணமாக திரு.எவரெஸ்ட், ராநாதாத் சிக்தரை துணை கலெக்டராக ஜிடிஎஸ் பிரிவிற்கு மாற்றினார். 1843 ஆம் ஆண்டு திரு. எவரெஸ்ட் பணி ஓய்வு பெற்றதையடுத்து ராதாநாத் சிக்தர் நிர்வாக இயக்குனர் ஆனார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ராதாநாத் சிக்தரை தலைமைக் கணித அதிகாரியாக கல்கத்தா மாநகருக்குப் பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் பாரமானியமுக்கத்தின் அளவீடுகளாக நடைமுறையிலிருந்தவற்றை மாற்றியமைக்கத் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைப் (உதாரணமாக, 32 டிகிரி பாரன்ஹீட் மாற்று கணக்கீடுச் சூத்திரம்) பயன்படுத்தினார்.

                             

இவர் தலைமையில் டார்ஜிலிங் அருகே பனி மூடிய மலைகள் அளவிடும் பணி கேணல் வாஹ் கேட்டுக்கொண்டபடித் தொடங்கியது. ஆறு வெவ்வேறு கண்காணிப்பு அளவீடுகளின்படி இன்றைய எவரெஸ்ட் சிகரமே உலகின் உச்சம் என ராதாநாத் சிக்தரால் அன்று பரிந்துரை செய்யப்பட்டு, சில வருடங்களுக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பனி சிகரத்திற்குப் பெயரிடப்படும்போது உள்ளுர் பெயர் முன்னுரிமை வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால், கேணல் வாஹ் இதற்கு விதிவிலக்குக் கொடுத்தார். தன்னுடைய முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த திரு. எவரெஸ்ட்டின் நினைவாக பெயரிடப்பட வேண்டும் என இராதானாத் சிக்தார் தெரிவித்தார். இதன் காரணமாக ராதாநாத் சிக்தாரின் பணி மற்றும் உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லை. 

எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த இராதானாத் சிக்தார் மே 17 , 1870ல் தனது 57வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஏப்ரல் 10, 1802ல் சென்னையிலே தொடக்கப்பட்ட மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தின் நினைவாக, இந்திய அஞ்சல் நிறுவனம், ஜூன் 27, 2004ல் சென்னையில் ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது. இதில் இராதானாத் சிக்தார் படமும், நைன் சிங்கு (இவரும் நில அளவீட்டில் முன்னணியில் பங்களித்தவர்) படமும் இடம் பெற்றிருந்தன.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி. 



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...