Tuesday, May 18, 2021

கணினிகளில் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படும் காந்தமின்தடைமம் என்னும் இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற, பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம் இன்று (மே 18, 1939).

கணினிகளில் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படும் காந்தமின்தடைமம் என்னும் இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற, பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம் இன்று (மே 18, 1939).  

பீட்டர் குருன்பெர்க் (Peter Grunberg) மே 18, 1939ல்  தற்கால செக் குடியரசு நாட்டில் உள்ள பில்சென் என்னும் ஊரில் பிறந்தார். உலகப்போர் முடிந்தபிறகு, பீட்டர் குருன்பெர்க் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்செ என்னும் மாவட்டத்தில் லௌட்டர்பாஃக் என்னும் ஊருக்குச் சென்று அங்கு உயர்நிலைப்பள்ளியில் ஜெர்மனியில் கிம்னேசியம் பயின்றார். குருன்பெர்க் 1962ல் யோஃகான் வுல்ஃவங்கு கொயெதெ பல்கலைக்கழகத்தில் இடைநிலை பட்டம் பெற்றார். பின்னர் டார்ம்ஸ்டட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1966ல் இயற்பியலுக்கான பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969ல் முனைவர் ஆய்வுப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1969-1972 வரை கனடாவில் ஆட்டவாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் மேல்முனைவர் ஆய்வுப்பயிற்சி பெற்றார். 1986ல் இவர் மெல்லிய காந்தப்படலங்களில் செய்த ஆய்வின் பயனாய் ஒரு விளைவைக் கண்டு பிடித்தார். 


HDD Animation on Behance

இரும்புக்காந்தப் பண்புள்ள இரண்டு படலங்களுக்கு நடுவே ஒரு மிக மெல்லிய (~1 நானோ மீட்டர்) இரும்பல்லாத காந்த படலம் (எடுத்துக்காட்டாக குரோமியம்) இருந்தால், இருபுறமும் உள்ள இரும்புக்காந்தப் படலங்கள் அணுக்கருகாந்தத்தன்மையால் தொடர்புற்று, இரும்புக் காந்தகளுக்கு இடையே மாறுதிசையில் காந்தப்பாய்வு ஏற்படும் என்று கண்டுபிடித்தார். பின்னர் 1988ல் இதனை பல்லடுக்கு மெல்லிய படலங்கள் வழி இவ் விளைவை மிகைப்படுத்தி மாபெரும் காந்தமின்தடைமம் (GMR) என்னும் விளைவைக் கண்டு பிடித்தார். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விளைவை தொடர்பேதுமின்றி ஆல்பர்ட் ஃவெர்ட் (Albert Fert) என்னும் பிரெஞ்ச் இயற்பியலாளர் தென் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் (Universite de Paris Sud) தனியாகக் கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்புக்காக இவ்விருவருக்கும் 2007ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 



 

ஐரோப்பாவில் உள்ள சிறந்த ஆய்வகங்களில் ஒன்றான யூலிஷ் ஆய்வு மையம் (Jülich Research Centre) என்னும் ஆய்வகத்தில் சேர்ந்து பல்லடுக்கு இரும்பு சேர்ந்த மென்படலத்தின் காந்தப்பண்புகள் பற்றிய ஆய்வில் முன்னிலை எய்தி பின்னர் 2004ல் ஓய்வு பெற்றார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி. 



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...